Monday , October 20 2025
Home / செய்திகள் (page 351)

செய்திகள்

News

பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது அனிதாவின் தற்கொலை…

சென்னை : அனிதாவின் தற்கொலை மூலம் தமிழக மக்களுக்கு பாஜக தன்னுடைய செயல்பாடுகளின் நிலையை விளக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்பு கடந்த ஜீலை 18ம் தேதி டுவிட்டரில் இருந்து தாம் விலகுவதாகக் கூறினார். அரசியல், சமூக பிரச்னைகளுக்கு டுவிட்டர் வலைதளம் மூலம் தனது கருத்துகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தார் குஷ்பு. இந்நிலையில் …

Read More »

அதிமுக ஆட்சி கவிழும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது – முதல்வர் ஆவேசப் பேச்சு

ஈரோடு: அதிமுக ஆட்சி நிலைக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது ஒரு போதும் நடக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்பட பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும், விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த உரையில், அதிமுக அரசு …

Read More »

வீட்டுக்குள்ளும் போராட்டம் நடத்தக் கூடாது.. ஆசிரியை சபரிமாலாவுக்கு போலீஸ் எச்சரிக்கை

விழுப்புரம்: நீட்டுக்கு எதிராக அரசு ஆசிரியை வேலையை ராஜினாமா செய்த சபரிமாலா வீட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுய்பட்டுக்கொண்டிருந்த போது, போலீசார் அவருடைய வீட்டுக்குள் சென்று மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை சபரிமாலா, நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் போராடுவதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதையடுத்து, தனது ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். மேலும் இன்று ஒருநாள் …

Read More »

பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள்… போலீஸ் தடையை மீறி திமுக கூட்டம்…

சென்னை: மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரியும், திமுக சார்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீட் தொடர்பான போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது. பல ஆயிரம் தொண்டர்களும், மாணவர் அமைப்பினரும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பிறகு, கூட்டத்தை ரத்து செய்வது சரியா …

Read More »

திமுக கூட்டத்திற்கு தடை விதிங்க!

சென்னை: உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் திருச்சியில் திமுகவினர் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜ ராஜன் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. போராட்டம் நடத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் திருச்சியில் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று …

Read More »

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் உக்கிரமடைந்துள்ளது. இந்த போராட்டங்களுக்கு தடை கோரியும் அனிதாவின் தற்கொலை குறித்து விசாரிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மணி என்பவர் …

Read More »

இடைக்கால அறிக்கை 21ஆம் திகதி வெளியாகும்! – அரசமைப்புப் பேரவையாக நாடாளுமன்று அன்று கூடும்

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக இதுவரை செயற்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழு, சுமார் எழுபதுக்கும் அதிகமான தடவைகள் கூடித் தயாரித்த இடைக்கால அறிக்கை, நீண்ட இழுபறிக்குப் பின்னர் முழு அளவில் இறுதி செய்யப்பட்டு, குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும்போது அங்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் அது சமர்ப்பிக்கப்படும். அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டடல் குழு கொழும்பில் எழுபத்து மூன்றாவது தடவையாக பிரதமர் ரணில் …

Read More »

கூட்டமைப்பின் கோட்டைக்குள் மலரத் துடிக்கிறது மஹிந்த அணி! – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் பஸில் இரகசியப் பேச்சு

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற வடக்கு மாகாணத்தில் கால்பதிப்பதற்குரிய முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மஹிந்த அணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறிவைத்து அரசியல் வியூகங்களையும் வகுத்துவருகின்றது. இதன்படி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் உட்பட வடக்கிலுள்ள சுமார் 30இற்கு மேற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் கொழும்பில் இரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது மஹிந்தவுடன் இணைந்து அரசியல் பயணத்தை …

Read More »

குப்பையைக் கிளறாதீர்! – பொன்சேகா மீது சம்பிக்க பாய்ச்சல்

“போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது ஒரு விரலை நீட்டினால் மீதி நான்கு விரல்களும் தன் பக்கம்தான் திரும்பியுள்ளன என்பதை சரத் பொன்சேகா மறந்துவிடக்கூடாது.” – இவ்வாறு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க. அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இராணுவத்தினர் மட்டுமா போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்? விடுதலைப்புலிகள் அமைப்பின் நெடியவன், …

Read More »

பொன்சேகா விவகாரம்: நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் கூட்டமைப்பு!

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவந்தால் அதற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகவும் செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் கடந்த வாரம் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிக்கட்டப் போரில் ஜெனரல் …

Read More »