Friday , October 17 2025
Home / செய்திகள் (page 350)

செய்திகள்

News

ஆடம்பர முட்டாள் கமல் : சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

நடிகர் கமலஹாசனை (ஆடம்பர முட்டாள்) என பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: (ஆடம்பர முட்டாள்) கமலஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக எனக்கு தெரியவந்துள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக டுவிட்டரில் கமல், அரசியல் விவகாரங்களை முன்வைத்து தீவிரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=ZyPXE7sxyDs

Read More »

தமிழக மக்களை வஞ்சிக்கும் ஆட்சி – விஜயகாந்த் பேச்சு

மதுரை : ”தமிழகத்தில் மக்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க., ஆட்சி நடக்கிறது,” என மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த கட்சியினர் திருமணவிழாவில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். அவர் பேசியதாவது:ஜெ., இறப்பிற்கு பின், தர்மத்தின் பக்கம் இருப்பதாக தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், பதவிக்காக முதல்வர் பழனிசாமி பின்னால் சென்றுவிட்டார். அவரது கொள்கை எங்கே போயிற்று. ஏழைகளுக்கு உதவாத ஆட்சி நடக்கிறது. வெற்றி பெற்று மக்களை வஞ்சிக்கின்றனர். எனவே தமிழக மக்கள் …

Read More »

என்னை தடுக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை

சாரணர் – சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட எச்.ராஜாவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலினுக்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ள எச்.ராஜா, செப்., 16 ல் நடக்கும் சாரணர்- சாரணியர் தலைவர் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். சாரணர் – சாரணியர் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே நான் போட்டியிடுகிறேன். என்னை போட்டியிட கூடாது …

Read More »

நீட்டுக்காக போராட வேண்டிய அவசியமில்லை! கமல் கூறிய புதிய யோசனை

தொடர்ந்து அரசியல், சமூக பிரச்சனைகள் பற்றி பேசிவரும் கமல்ஹாசன் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீட் தேர்வு பற்றி பேசினார். “இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி, இதில் ஏன் நீட் பற்றி பேசவேண்டும். எப்போதும் பொழுதுபோக்கிகொண்டிருக்க முடியாது. நீட் தேர்வுக்காக நாம் போராட வேண்டிய அவசியமில்லை. நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை நாம் எங்கோ தவறவிட்டுவிட்டோம். இது என் கருத்து, விமர்சனங்களை வரவேற்கிறேன். கல்வி கொள்கைகளை வகுக்கும் உரிமை மாநில …

Read More »

அனிதாவின் குடும்பத்துக்கு லாரன்ஸ் செய்த செயல் என்ன தெரியுமா?

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கி இருக்கிறார். நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத வேதனையில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். அனிதா தற்கொலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், …

Read More »

கரீபியன் தீவுகளை சூறையாடிய ‘இர்மா’ சூறாவளி: 14 பேர் பலி

கரிபீயன் தீவுகளை இர்மா புயல் சூறையாடியுள்ளது. இதில் 14 பேர் பலியாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவின் 2 அணு உலைகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரம் வீசிய ஹார்வி புயலால் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அட்லாண்டிக் கடலில் தற்போது உருவாகியுள்ள இர்மா சூறாவளி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் கோரத்தாண்டவமாடி வருகிறது. கரீபியன் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் சுயாட்சி பெற்ற போர்ட்டோரிகா, …

Read More »

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

மெக்சிகோ தென் கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0-ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவலில், “மெக்சிகோவின் தென் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கவுத்தமாலாவில், ரிக்டர் அளவுகோலில் 8.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்த நிலநடுக்கம் தென்மேற்கே உள்ள பிஜிஜப்பான் நகரிலிருந்து 123 கிலோமீட்டர் தொலைவில் …

Read More »

கொரிய எல்லையில் சீனா போர் ஒத்திகை

கொரிய தீபகற்ப எல்லையில் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க தென்கொரியாவின் முப்படைகளும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வடகொரியா விவகாரத்தில் சீனா ஏற்கெனவே தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. “வடகொரியா மீது அமெரிக்காவும் தென்கொரியாவும் போர் தொடுத்தால் அதனை தடுப்போம். ஒருவேளை அமெரிக்கா, தென்கொரியாவை வடகொரியா தாக்கினால் …

Read More »

திருச்சியில் இன்று பா.ஜ.க பொதுக்கூட்டம்

சென்னை: நீட் க்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளதை வரவேற்கதக்கது என பா.ஜ.க மாநில தலைவர் கூறினார். இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை: சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வரவேற்கதக்கது. இந்த கூட்டம் மக்களை திசை திருப்பும் கூட்டம். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (செப்..9) மாலை 4 மணிக்கு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் …

Read More »

எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த 19 பேரில் ஒருவரான கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். இதனால் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. இந்நிலையில் ஆளுநர் …

Read More »