Monday , October 20 2025
Home / செய்திகள் (page 349)

செய்திகள்

News

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை கொடூரமாக கொன்றேன்

ஹைதரபாத் : தெலுங்கானா மாநிலம் மியாபூரை சேர்ந்தவர் கிஷோர் ஜெயின், இவர் மகள் சாந்தினி(17) 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை நண்பர்களை சந்திக்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் சாந்தினியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மடினகுடா வனப்பகுதியில் …

Read More »

அமெரிக்கா மீது வரலாறு காணாத தாக்குதல்

சுவிட்சர்லாந்து: ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே வடகொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது என்றார். மீண்டும் மீண்டும் வடகொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா கலங்கம் விளைவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பலனை அமெரிக்கா விரைவில் உணரும் என்றும் அவர் …

Read More »

புதிய அரசமைப்பு மீது நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு!

புதிய அரசமைப்பு மீது எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அந்தக் காலஎல்லையை இலக்குவைத்து புதிய அரசமைப்பை தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்தியுள்ள அரசு, இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. புதிய அரசமைப்பை 2017 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுமீது இராஜதந்திர மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றாவிட்டால் இனி …

Read More »

சர்வஜன வாக்கெடுப்புக்கு சம்பந்தன் பச்சைக்கொடி!

“புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும். அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அரசிடமும் தெளிவுபடுத்தியுள்ளோம்.” –  இவ்வாறு தெரிவித்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். “புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் காலம், பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் காலம் என்பன குறித்து எங்களுக்கு எதுவும் உறுதியாகத் தெரியாது. அவை உரிய முறைப்படி நடக்குமென எதிர்பார்க்கிறோம். ஆனாலும், சர்வஜன …

Read More »

சம்பந்தனை அழைக்கிறார் கோட்டா! – ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் பெருமெடுப்பில் கண்டியில் 

புதிய அரசமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உதயமாகியுள்ள ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தான் அழைப்பு விடுக்கவுள்ளார் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ‘எலிய – ஒளிமயமான அபிலாஷைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு அறிமுகம் செய்யும் நிகழ்வு பாதுகாப்பு …

Read More »

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர நினைவுத்தூபி! – அநுராதபுரத்தில் அமைப்பது பற்றி பரிசீலிப்பு என்கிறார் ருவான்

போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபியை அமைப்பதற்குரிய முழு ஆதரவையும் அரசு வழங்கும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்றில் அறிவித்தார். போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக நினைவுத்தூபியொன்றை அமைக்கவேண்டுமெனக் கோரி ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரின்போது தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் தமது உறவுகளை …

Read More »

’20’ ஐ திருத்தங்களுடன் மாகாண சபைகளில் களமிறக்கியது அரசு! – அடுத்த வாரம் விசேட அமர்வு

திருத்தியமைக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மாகாண சபைகளின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசு மீண்டும் அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பில் விவாதித்து – தீர்மானமொன்றை எடுப்பதற்காக அடுத்த வாரம் சகல மாகாண சபைகளும் விசேட அமர்வை நடத்தவுள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கும், தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்கும் வழிவகுக்கும் வகையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை தேசிய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்து, …

Read More »

ப்ளூ வேல் விளையாட்டால் விபரீதம்: ராஜஸ்தானில் ஏரியில் குதித்த மாணவி

ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை போலீஸார் மீ்ட்டனர். தற்கொலைக்குத் தூண்டும் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பை, கொல்கத்தா, உத்தரபிரதேசம் மட்டுமின்றி தமிழகத்தில் மதுரையிலும் ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டை நீக்கி விடுமாறு …

Read More »

வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதும் பரிசீலனையில் உள்ளது. பெரும்பாலும் போரை தவிர்க்கவே விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று முன்தினம் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. …

Read More »

ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

மதுரை: அதிமுக அரசை ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆவேசமாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் தினகரன் இன்று இரவு அளித்த பரபரப்பு பேட்டியின் விவரம்: துரோகம், சுயநலம் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது அம்மாவின் ஆட்சியல்ல, எடப்பாடி பழனிச்சாமியின் துரோக ஆட்சி. இந்த மக்கள் விரோத ஆட்சியை மாற்றவும் நாங்கள் தயாராகிவிட்டோம். தர்ம யுத்தம் …

Read More »