நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தனி கட்சி துவங்குவதற்காக அதிக வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. ரசிகர்களும் இதனை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். கமல் அரசியலுக்கு வந்தால் எப்படி இருப்பார்? அமைச்சரவை எப்படி இருக்கும்? என்பதை இப்பொழுதே கற்பனை செய்து விட்டார்கள் ரசிகர்கள். அதன் வெளிப்பாடாக தற்போது கமல்ஹாசனின் அமைச்சரவை என ஒரு கற்பனை புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படத்தில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் இதில் இருக்கும் …
Read More »ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததும் பிணைமுறி மோசடியாளர்கள் தண்டனை பெறுபவர்!
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்ததும் குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். “ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் அது மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும். பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக …
Read More »தேர்தலுக்குத் தயாராகுங்கள்! – ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் பணிப்புரை
தேர்தல்களுக்குத் தயாராகுமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு அதிரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளது ஆளும் கூட்டணி அரசின் தலைமைப்பீடம். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வராத பட்சத்தில் அதற்கு மாற்றீடாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என உயர்மட்ட சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியதையடுத்தே அரச தலைமைப்பீடம் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கைவிடவேண்டிய நிலை ஏற்படுமென சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அரசதலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலேயே …
Read More »அரசியலில் களமிறங்குகிறார் மைத்திரியின் மகள் சத்துரிகா! – மாகாண சபைத் தேர்தலில் போட்டி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிகா சிறிசேன தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்றும், அவை முடிவடைந்த பின்னர் தான் அரசியலில் களமிறங்குவதற்கான காரணத்தை விளக்கும் வகையில் அவர் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தகவல் தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சிபெற்ற அவர் தற்போது வணிகத்துறையில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே அவற்றைவிடுத்து முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கான பிள்ளையார் சுழியாகவே ‘ஜனாதிபதி தந்தை’ …
Read More »மாமியார், வீட்டுக்கு, பல தடவை, சென்றவன் நான்!
சென்னை: ”மாமியார் வீட்டுக்கு, நான் பலமுறை சென்று வந்து விட்டேன். ஆட்சி கலைக்கப்பட்டதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மாமியார் வீட்டுக்கு செல்வது உறுதி,” என, தினகரன் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத் தியாகி போல அவர் பேசியது, சுற்றி இருந்தவர்களைநகைப்புக்குள்ளாக்கியது. சென்னையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., சார்பில் நடந்த, அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘தினகரன், விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்வார்’ என்றார்.அதற்கு பதில் அளித்து, நேற்று …
Read More »வாகனங்கள் வைத்திருப்போர் பட்டினி கிடக்கவில்லை : அமைச்சர் பேச்சு
திருவனந்தபுரம்: வாகனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினி கிடக்கவில்லை. வசதியுடன் தான் உள்ளனர் என அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம் கூறி உள்ளார். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயித்துவருகிறது.இந்த முறைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விலைமாற்றத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிம் பேசிய அல்போன்ஸ் கண்ணந்தனம் வா கனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினியாக …
Read More »தலைவா டைம் டு லீட்…’ – விஜய்யை அரசியலுக்கு அழைக்கிறாரா சாந்தனு?
சென்னை : நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ், சிபிராஜ் இருவரும் ட்விட்டரில் அரசியல்வாதிகளைச் சாடியுள்ளனர். கார் வாங்குவதற்கே லைசென்ஸ் கட்டாயமாகத் தேவைப்படும்போது அரசியல்வாதிகளுக்கு தகுதி வேண்டாமா எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என இளம் நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு ஆகியோர் மறைமுகமாக ட்விட்டரில் அழைப்பு விடுத்திருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாகிறார்கள்.
Read More »தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் படங்களை வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கம்!!
சென்னை : தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரு இணைய தளங்களின் நிர்வாகிகள் என்று கூறி இரு நபர்களின் படங்களை தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. இவர்களைப் பற்றி தகவல் தருமாறும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழில் வெளியாகும் புதிய படங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றி, திரைத் தொழிலை சிதைப்பதாக இந்த இணைய தளங்களின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், அண்மையில் வேலூர் அருகே …
Read More »எம்பிக்கான பென்ஷன் எனக்கு வேண்டாம்…
சென்னை: எம்பிக்கான பென்ஷன் தொகை இனி தனக்கு வேண்டாம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மாநிலங்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமத்துவமக்கள் கட்சித் தலைவரான சரத்குமார் 2002ஆம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்ஜிய சபா உறுப்பினராக்கப்பட்டார். ஆனால் 2006ஆம் ஆண்டு கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து முன்னாள் எம்பிக்கான ஓய்வூதியம் சரத்குமாருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனக்கு வழங்கப்படும் முன்னாள் எம்.பி.க்கான …
Read More »வீறுகொண்டு எழுந்த விஜயகாந்த்.. காரைக்குடியில் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த அறிவிப்பு
சென்னை: தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30ம் தேதி காரைக்குடியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.09.17 …
Read More »