“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில், இராணுவத்தினரின் வசமுள்ள கடற்கரையோரம் உட்பட்ட சுமார் 25 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு, முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்துவதோடு, இவ்விடயம் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டுவரவுள்ளேன். – இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். “யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதியில், மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்த முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப் பகுதி உட்பட25 ஏக்கர் …
Read More »பத்து வருடங்களாக சிறையில் வாடிய அரசியல் கைதி 3 வழக்குகளிலிருந்து விடுதலை!
வத்தளை, எலகந்தைப் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்று நிலையத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிய சதித் திட்டம் தீட்டினார் என்பது உட்பட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மூன்று வழக்குகளை எதிர்கொண்டகிளிநொச்சி இளைஞரொருவர் கடந்த சுமார் பத்து ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நிலையில், அவரது சட்டத்தரணியான கே.வி.தவராஜாவின் வாதத்தையடுத்து மூன்று வழக்குகளிலிருந்தும் விடுதலைசெய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயராம் இராமநாதனுக்கு எதிராக …
Read More »மாகாண ஆளுநர்களை சந்திக்கிறார் மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மாகாண சபைகளின் ஆளுநர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது. ஆயுட்காலம் முடிவடைகின்ற கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய ஆகிய மாகாண சபைகளின் ஆட்சியதிகாரத்தை ஆளுநர்களிடம் ஒப்படைப்பதே அரசின் திட்டமாக இருந்தது. எனினும், தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பில் அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக இறுதி முடிவெதையும் எடுக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுநர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் பிரதமரும் …
Read More »’20’ குறித்து உரிய முடிவு! – அரசு தெரிவிப்பு
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்கீழ் கட்டளை மீதான விவாதம் ஆரம்பமானது. இதில் உரையாற்றிய தினேஷ் குணவர்தன எம்.பி.,”நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்திலிருந்து 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்னமும் அகற்றபடவில்லை. இது …
Read More »வித்தியாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி – வித்தியாவின் தாய் நெகிழ்ச்சி
என்னைப் போன்று இனி எந்தத் தாயும் அழக் கூடாது. என் மகள் வித்தியாவுக்காக கஸ்டப்பட்ட அனைவருக்கும் கண்ணீருடன் வித்தியா சார்பில் நன்றி கூறுகின்றேன். இவ்வாறு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீருடன் தெரிவித்தார். வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு இன்று தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகள் …
Read More »வித்தியா கொலை வழக்கு – 7 பேருக்குத் தூக்கு!!
1ஆம், 7ஆம் எதிரிகள் வித்தியா கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 7 பேருக்கு தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்தது. நீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்புக்கு குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலா 30 ஆண்டு ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 …
Read More »நாளைய தீர்ப்பு வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்சலி!
யாழ். புங்குடுதீவு மாணவியான வித்தியா, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொடூர சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவிருக்கின்றது. மாணவி வித்தியா வன்புணர்வு, படுகொலை தொடர்பான வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் நாளை மேற்படி தீர்ப்பை வழங்கவிருக்கின்றது. உலகையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமென வர்ணிக்கப்படுகின்ற இக்குற்றச் செயலின் வழக்குத் தீர்ப்பை உலகெங்கும் ஏராளமானோர் பரபரப்புடன் …
Read More »இனத்தையும் நாட்டையும் எதற்காகவும் விட்டுக்கொடார் மஹிந்த! – மாவையிடம் அவரே திட்டவட்டம்
“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான விதந்துரையை வாசித்தேன். அதற்கு மேல் அறிக்கையை வாசிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. என்ன காரணத்துக்காகவும் நாட்டையும் இனத்தையும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார் குருநாகல் மாவட்ட எம்.பியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் …
Read More »மஹிந்தவின் ஆட்டம் ஆரம்பம்! – இடைக்கால அறிக்கை கையிலெடுப்பு
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது பற்றி ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி இன்று கொழும்பில் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து பொது எதிரணி எம்.பிக்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மஹிந்தவுக்குச் சார்பான சட்டவல்லுநர்கள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அரசமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக …
Read More »சிவசக்தி ஆனந்தனையும் வியாழேந்திரனையும் பாராட்டுகிறார் நாமல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷ எம்.பி. பாராட்டுத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் நடந்துகொண்ட விதம் தொடர்பாகவே தனது டுவிட்டர் தளத்தில் அவர் தமிழில் பாராட்டிப் பதிவேற்றியுள்ளார். “நாடாளுமன்றம் வந்தும் தமிழ்த் தேசியக் …
Read More »