Friday , October 17 2025
Home / செய்திகள் (page 340)

செய்திகள்

News

வித்தியா கொலை வழக்குத் தீர்ப்பு நீதி தேவதைக்குக் கிடைத்த வெற்றி! – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்

“யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புங்குடுதீவு மாணவி  வித்தியா தொடர்பான வழக்குக்கு, நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதி தேவதைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். கடந்த காலங்களைவிட தற்போது, அரசின் தலையீடு இல்லாமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயல்படுகின்றது. இது நல்லாட்சியின் மூலம் கிடைத்த ஒரு வெற்றியாகும். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள். சட்டம் அனைவருக்கும் சமனானது என இந்தத் தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் …

Read More »

அமெரிக்காவை எதிர்கொள்ள 5 மில்லியன் ராணுவத்தினர் தயார்: வடகொரியா அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள 5 மில்லியன் வடகொரிய ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. டிரம்ப் அரசியின் அச்சுறத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு வடகொரிய ராணுவத்தில் இணைந்து போராட 4.7 மில்லியன் மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் மற்றும் பணியாளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதில் 1.22 மில்லியன் பேர் இளம் பெண்கள் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி வடகொரியாவின் புகழில் களங்கம் விளைவிக்கும் …

Read More »

ஜெயலலிதா எனக்கு இட்லி ஊட்டிவிட்டாங்க: நடிகை கஸ்தூரி

ஜெயலலிதா கனவில் வந்து தனக்கு இட்லி ஊட்டிவிட்டதாக நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவர் உடல்நலம் தேறி இட்லி சாப்பிட்டார் என அதிமுக-வின் முக்கிய பிரமுகர்கள் பேட்டியளித்தனர். ஆனால் அவர் உயிரிந்த பின்னர் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் பொய் சொன்னோம், நாங்கள் அவரை பார்க்கவே …

Read More »

கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி கைது

சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜெனீவாவில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரே தமிழ் புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ஆதரவு தெரிவித்தார். ஆதரவு தெரிவித்துவிட்டு திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் …

Read More »

ஸ்டாலின் பதவி ஆசை இல்லாத துறவியா: அமைச்சர் சண்முகம் கேள்வி

புதுடில்லி: தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டி: ஸ்டாலின் பதவி ஆசை இல்லாத துறவியா? ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் கேட்டவர் ஸ்டாலின் தான். சிபிஐ மீது நம்பிக்கை உள்ளதாக கூறும் ஸ்டாலின், 2ஜி ஊழலில் சி.பி.ஐ., விசாரணை முடிவை ஏற்பாரா? இவ்வாறு அவர் கூறினார்.

Read More »

வைகோ மீது தாக்குதல் முயற்சி: முதல்வர் கண்டனம்

சென்னை: ஜெனிவாவில் வைகோ மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. எதிர்காலத்தில் இது போல் நிகழா வண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read More »

‘பதஞ்சலி, ‘பிராண்டு’ மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உயரும்’

புதுடில்லி : ”அடுத்த ஐந்து ஆண்டுகளில், பதஞ்சலி நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2 லட்சம் கோடி டாலராக உயரும்,” என, அதன் நிறுவனர், பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அவர், மேலும் கூறியதாவது:பதஞ்சலி, நுகர்பொருட்களுடன், புதிய துறைகளிலும் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பூங்காக்கள் அமைப்பது, தயாரிப்பு தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உள்ளது. இரு ஆண்டுகளில், நிறுவனத்தின் தயாரிப்பு திறன், 1 லட்சம் …

Read More »

போர்க்குற்றச்சாட்டு: ஐ.நாவுடன் பகிரங்க விவாதத்துக்கு தயார்! – இலங்கை இராணுவத் தளபதி அறிவிப்பு

“இலங்கைப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” இவ்வாறு  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவித்தார். கண்டியில் நேற்று அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “இராணுமானது எவ்வாறு ஒழுக்க விழுமியத்துடன் …

Read More »

அத்தியாவசியப் பொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு! – அரசு அறிவிப்பு

அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார். நாட்டில் திடீரென ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டால் சந்தையில் அரிசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் நாட்டில் பல பாகங்களிலும் …

Read More »

ரோஹிங்யா முஸ்லிம்களை அரசு கைவிடவே கூடாது! – மஹிந்த தெரிவிப்பு

“அகதிகளாக வந்தவர்களை நாம் கைவிடக்கூடாது: அது இலங்கையின் கலாசாரமும் அல்ல. எனவே, சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டிருக்காது அந்த மக்களை அரசு பாதுகாக்கவேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தஞ்சம் புகுந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள வீட்டை சுற்றிவளைத்த குழுவொன்று அவர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்டதுடன், அடாவடிச் செயலிலும் ஈடுபட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் வினவியபோதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் …

Read More »