தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்செய்ல் (Marseille ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles ) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் இன்று இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த பிரதேசத்துக்கு சென்ற காவல்துறையினர் தாக்குதலாளியை சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. குறித்த பகுதிக்கு பொதுமக்கள் …
Read More »அரசியலில் வெற்றி பெறும் சூட்சமங்கள் கமலுக்கு மட்டுமே தெரியும்!
நடிகர் திலகம், செவாலியே சிவாஜி என தமிழ் சினிமாவில் ஒப்பற்றவராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவரின் மணி மண்டபம் இன்று சென்னை அடையாறில் திறக்கப்பட்டது. இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என பலர் பங்கேற்றனர். நடிகர் சங்கம் சார்பாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கமல் பேசிய போது எத்தனை தடைகள் இருந்தாலும், ஒரு ரசிகனாக இங்கு வந்திருப்பேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்த கலைத்துறைக்கும், தமிழக அரசுக்கும், அரசியல்லுக்கும் நன்றி …
Read More »அரசியலுக்கு வர என்ன தகுதி வேண்டும் என தெரியவில்லை..! புலம்பும் ரஜினி…!!
சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசன் மணி மண்டப திறப்பு விழா நடந்தது. இதில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது,இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள ஓபிஎஸ் அதிர்ஷ்டசாலி. இது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு சிலை வைக்கும் பாக்கியம் பலகோடி பேர்களில் ஒருவருக்குதான் அமையும். அது …
Read More »பௌத்த தேரர்களை அரசியல் தலைவர்களே தீர்வுக்கு வழிப்படுத்த வேண்டும்!
“அரசியல் தீர்வுக்கு தமிழர் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக பௌத்த தேரர்களும் தென்னிலங்கை இனவாதிகளுமே தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்களை தெற்கு அரசியல் தலைவர்களே வழிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் உங்களின் பொறுப்பு.” – இவ்வாறு பஸில் ராஜபக்ஷவிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எடுத்துரைத்தார். இரண்டு நாள் பயணமாக வடக்குக்கு …
Read More »வடக்கு, கிழக்கு வாழ் மலையகத்தவர்களுக்கு தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வேண்டும்!
வடக்கு – கிழக்கில் உள்ள மலையக மக்களுக்கு தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மலையக மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோரை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள மலையக மக்கள் …
Read More »உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு: தமிழரசுக் கட்சியுடன் ரெலோ நாளை முக்கிய பேச்சு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துடன் பேசுவதற்கு ரெலோ அமைப்பு தீர்மானித்திருந்தது. தமிழரசுக் கட்சியிடம் அதற்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது
Read More »சு.க. உறுப்பினர்களுடன் தனித்தனியே மைத்திரி இரகசிய சந்திப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையே இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நீர்க்கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் சுமார் மூன்று மணிநேரத்துக்கும் மேல் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பில் கட்சி உறுப்பினர்களை தனித்தனியே சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளமை ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது. தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்திவருவதாலும், மேலும் சிலர் மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்பட்டுவருவதாலும் கட்சியை முன்நோக்கி அழைத்துச்செல்வதில் …
Read More »மஹிந்தவை வளைக்க மறுபடியும் ‘கதிரை’! – திட்டத்தை தூக்கி வீசினார் மைத்திரி
பொதுஜன ஐக்கிய முன்னணி ஊடாக ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது. மேற்படி முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியை சமல் ராஜபக்ஷவுக்கு வழங்கி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கதிரை’ சின்னத்தில் களமிறங்கவேண்டும் என முன்வைக்கப்பட்ட திட்டமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்திலேயே …
Read More »2020இல் ஆட்சியைக் கைப்பற்ற பலம்வாய்ந்த கூட்டணியை அமைக்க ஜே.வி.பி. தீவிரம்!
2020ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பி. நாட்டிலுள்ள சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களுடனும், சிவில் அமைப்புகளிடனும், கல்விமான்களிடனும் தீவிர கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாக அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக எதிர்க்கும் ஜே.வி.பி., பிரதமர் தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சியைக் கொண்டுவரும் முனைப்புடன் புதிய அரசமைப்பொன்றை கொண்டுவர அரசுடன் ஒன்றிணைந்துச் செயற்பட்டுவருகிறது. மறுபுறத்தில் 2020ஆம் ஆண்டு புதிய ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர நகர்வுகளையும் முன்னெடுத்துவருகிறது. அதனடிப்படையில் நாட்டில் …
Read More »கேப்பாப்பிலவு காணி விவகாரம்: பேச்சுக்கு சம்பந்தனுக்கு மைத்திரி அழைப்பு
கேப்பாப்பிலவு காணி விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள 302 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் கடந்த 215 நாட்களாகத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். காணி விடுவிப்புத் தொடர்பில் கடந்த மே மாதம் …
Read More »