Saturday , October 18 2025
Home / செய்திகள் (page 338)

செய்திகள்

News

புதிய அரசமைப்புக்கு எதிரான கோட்டாவின் வியூகத்தை முறியடிக்க முப்படையினரையும் நாடுகின்றது அரசு!

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது நாட்டைக் கூறுபோடுவதற்கான ஆரம்பகட்டம் என்றும், அது படையினருக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூட்டு எதிரணியால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரப்போரை முறியடிக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஆரம்பகட்ட வியூகமாக அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் முப்படையினருக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் சட்டப்பணியகத்தின் உதவியுடனும், சட்டவல்லுநர்களின் பங்களிப்போடும் முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக அண்மையில் இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கு கருத்தரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது. …

Read More »

ஒற்றையாட்சி முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது! – சமஷ்டிக்கு இடமில்லை

“புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் சிபாரிசுகளின் பிரகாரம் இலங்கை பிளவுபடாததும் பிரிக்கமுடியாததுமான நாடாக காணப்படுகின்றது. அத்துடன், ஒற்றையாட்சி கட்டமைப்பும் முன்பிருந்ததைவிட பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். அத்துடன், அதிகாரப்பகிர்வு குறித்து நாட்டில் தவறான முன்னுதாரணங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், சமஷ்டி என்ற அம்சம் (இலட்சனை) இடைக்கால அறிக்கையில் எங்கும் கூறப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். …

Read More »

நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு!

இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் முதன்முறையாக 1947 ஒக்ரோபர் 14ஆம் திகதி சபாநாயகர் அல்பிரெட் பிரான்சிஸ் மொலமூர் அல்பேர்ட் பீரிஸ் தலைமையில் கூட்டப்பட்டிருந்தது. 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 20ஆம் திகதிவரையான 19 நாட்கள் நடந்த பொதுத் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றனர். நான்கு ஆண்டுகள் ஐந்து …

Read More »

சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு இடமாற்றியதை எதிர்த்து மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் …

Read More »

அடைக்கலம் தேடிவரும் அகதிகளை விரட்டியடிப்பது சர்வதேச குற்றம்!

“ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அடைக்கலம் தேடிவருபவர்களை விரட்டியடிப்பது சர்வதேச அகதிகள் சட்டத்தின்படி மாபெரும் குற்றமாகும். எனவே, மியன்மாரில் அரங்கேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை நடவடிக்கையையடுத்து அங்கிருந்து அடைக்கலம் தேடி இலங்கை வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.” – இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கொழும்பில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது பௌத்த பிக்குமாரும், சிங்கள இனவாதிகளும் நடத்திய அராஜகச் செயற்பாடுகள் …

Read More »

வடக்கு – கிழக்கு இணைப்பு: பேச்சு நடத்த முஸ்லிம் சகோதரர்களுக்கு சம்பந்தன் அழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புத் தொடர்பில் உரையாற்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் மன்னார் மாவட்ட மக்களோடு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கை குழுவின் அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது இறுதியானது அல்ல. அதேநேரம் இந்த …

Read More »

மோடி மீது நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவேசம்

பிரபல கர்நாடக பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து, மவுனமாக இருப்பதன் மூலம் தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். …

Read More »

யாழ்.காரைநகரில் கடற்படையின் படகு மோதி மீனவர் ஒருவர் பலி!

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் படுகாயமடைந்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுடன் கடற்படையின் படகு மோதிப் படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மீனவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரைநகர் கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காரைநகர் வெடியரசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் (வயது – 38) …

Read More »

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்த போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அமெரிக்க நேரப்படி இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு தொடங்கியது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மக்கள் அலறியடித்து ஓடினர். இதில் இருவர் உயிரிழந்தனர். 24 பேர் …

Read More »

கனடா எட்மன்டனில் பயங்கரவாத தாக்குதல்?

கனடா-எட்மன்டனில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஒரு பயங்கரவாத தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் குத்தப்பட்டதுடன் பாதசாரிகள் U-Haul டிரக்கினால் தாக்கப்பட்டுள்ளனர். ஓடிக்கொண்டிருந்த யு-ஹால் வாகனத்தில் இருந்து இத்தாக்குதல் நடாத்தப்பட்டுளளது. நான்கு பாதசாரிகள் மோதி விழுத்தப்பட்டுள்ளனர். எட்மன்டனை சேர்ந்த 30-வயதுடைய மனிதன் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவன் தனியாக செயல்பட்டதாக தெரிவித்த பொலிசார் இதில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டடிருப்பார்களா என கருதப்படவில்லை. எட்மன்டன் மக்களை- அவர்களது சுற்றாடல்களில் இருப்பவர்களை எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு எட்மன்டன் …

Read More »