Friday , October 17 2025
Home / செய்திகள் (page 335)

செய்திகள்

News

திருப்பதியில் மைத்திரி தரிசனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். நேற்று பெங்களூர் வழியாக திருப்பதி சென்ற ஜனாதிபதி மைத்திரி, அவரது துணைவியார் ஜயந்தி புஸ்பா குமாரி, மகன் தஹம் சிறிசேன ஆகியோர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் ஏழுமலையான் ஆலயத்தில் சுப்ரபாத சேவையின்போது வழிபாடுகளை மேற்கொண்டனர். இதையடுத்து. அவர்களுக்கு திருப்பதி ஆலயத்தின் சார்பில், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளால் ஜனாதிபதி கௌரவிக்கப்பட்டு, ஆலய …

Read More »

திராவிட முன்னேற்ற கழகத்தின் பக்கம் சாய்கிறதா நடிகர் சங்கம்?

ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்று சினிமா துறைக்கு பிரச்சனை ஏற்படும் போது தன்னை மட்டுமல்ல திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகரையும் அழைக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அச்சங்கத்தின் துணை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார். அப்போது, தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கும், அத்தகைய மாயை நடந்ததற்கும் காரணம் தான் நடிகர் சங்கத்தின் துணை …

Read More »

தமிழக அரசு மீது தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு!

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் புகார் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அருகே நிலவேம்பு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கேரள அரசு …

Read More »

கணவர் நடராஜனுடன் சசிகலா இரண்டாவது நாளாக சந்திப்பு!

சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா இரண்டாவது நாளாக சந்தித்தார். சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவரின் உடல் நிலை கருதி சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த அவர் நேற்று குளோபல் …

Read More »

பிக்பாஸ் குறித்து கேப்டன் விஜயகாந்த் கலக்கல் பதில்

கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் பரபரப்பாக பல மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். இதில் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இதில் இவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கின்றீர்களா? என்று ஒரு கேள்வியை கேட்க உடனே கேப்டன் ‘பிக்பாஸுன்னா என்ன’ என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பிறகு சில நொடி கழித்து மீண்டும் ‘ஓ கமல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றாரே அதுவா?, அதெல்லாம் பார்க்க நேரமில்லைப்பா, …

Read More »

அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: விஷால் அதிரடி

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க பொது செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகிய பதவிகளை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அடுத்த நடிகர் சங்க தேர்தல் பற்றி கேட்கப்பட்டது. அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திமுடிக்கப்படும் என்றும், அதில் நிச்சயம் நானும் போட்டியிடுவேன் என விஷால் அப்போது தெரிவித்தார்.

Read More »

இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா

அமெரிக்கா: இலங்­கைப் படை­க­ளுக்கு இடை­யி­லான கூட்­டுப் பயிற்சி போன்ற வாய்ப்­பு­கள் இன்­னும் அதி­க­ரிக்­கும் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. திரு­கோ­ண­ம­லை­யில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்­று­டன் முடி­வ­டைந்த, அமெரிக்கா – இலங்கைக் கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்­பாக அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தினால் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் துணைத் தூது­வர் ரொபேர்ட் ஹில்­டன், இலங்கை அரசு நல்­லி­ணக்­கம், நீதி மற்­றும் மனித உரி­மை­கள் போன்­ற­வற்­றில் தொடர்ந்து …

Read More »

சசிகலா, தினகரன் இருவரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்- ஓபிஎஸ் தரப்பு

சசிகலாவும், டிடிவி தினகரனும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினராகக் கூட இல்லை எனவும் தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது ஓபிஎஸ் அணி. அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மூட்டை மூட்டையாக பிரமாண பத்திரங்களை தாக்கல் …

Read More »

ஜி.எஸ்.டி வரி மாற்றத்தால் சீக்கிரமே வந்துவிட்டது தீபாவளி: பிரதமர் மோடி

Narendra Modi

ஜாம்நகர்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள துர்காதீஷ் கோவிலுக்கு வழிபாடு நடத்த சென்றிருந்தார் பிரதமர் மோடி. இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கும் இவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்து மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் அவர் ”ஜி.எஸ்.டி வரி விதி மற்றும் அதில் வந்திருக்கும் மாற்றங்கள் காரணமாக மக்களுக்கு சீக்கிரமே தீபாவளி வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரதமராக மோடி …

Read More »

‘கெயில்’ திட்டம் ஸ்டாலின் எச்சரிக்கை

‘மீண்டும் கெயில் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய,- மாநில அரசுகள் முயற்சித்தால், விவசாயிகளுடன் இணைந்து, தி.மு.க., போராடும்’ என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், விளை நிலங்களுக்கு இடையில், ‘கெயில்’ நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிஆகிய, ஏழு மாவட்டங்களில், விளைநிலங்களின் வழியாக, 310 கிலோ மீட்டர் துாரத்துக்கு, 20 மீட்டர் …

Read More »