இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் ஐ.நா. அதிகாரிகளும் ஆர்வம்கொண்டுள்ளனர். அந்தவகையில் நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் எதிர்வரும் 20ஆம் திகதி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால அறிக்கை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். புதிய …
Read More »அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வடக்கில் ஹர்த்தால்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் நடைபெறவுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இந்தக் ஹர்த்தாலுக்கு பல பொது அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், வடக்கு …
Read More »போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம்
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும். இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, …
Read More »தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9 மணியளவில் யாழ். நகர் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் …
Read More »அமெரிக்காவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. வீடுகள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்ட வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 6.6 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானது. புல்டிர் தீவில் 111.8 கி.மீட்டர் (69 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் …
Read More »உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையில் உண்ணாவிரதக் கைதிகள்!
“அநுராதபுரம் தொடர் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ளன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மௌனத்தைக் கலைத்து உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்கவேண்டும், அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது …
Read More »புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து புலம்பெயர் அமைப்புகளுக்கு விளக்கம்!
புதிய அரசமைப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு விளக்கமளிக்க அரசு முடிவுசெய்துள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் உள்ளடக்கம் குறித்து உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் கருத்தாடல்கள் வலுப்பெற்று வருகின்றன. தெற்கில், நாடு இரண்டாகப் பிளவுபடக் போகின்றது. சமஷ்டியைக் கொண்டுவரப் போகின்றனர் என அரசியல் இலாபத்துக்காக தீவிர இனவாதப் பிரசாரத்தில் மஹிந்த அணியான பொது எதிரணி …
Read More »கோட்டாவைக் கைதுசெய்து ‘ஹீரோ’வாக்க வேண்டாம்!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்வதை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்து நாட்டு மக்கள் மத்தியில் அவரைப் பெரியாளாக்கிவிட வேண்டாம் என்றும், அவரைக் கைதுசெய்வதைத் தடுக்குமாறும் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகள் மீது தன்னால் தலையிட முடியாது என்றும், அவரைக் …
Read More »புதிய அரசமைப்பில் தமிழருக்கு தீர்வு கிடைக்குமா? – அறிவதில் அமெரிக்கா நாட்டம்
இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. இந்த முயற்சியின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அமெரிக்காவுக்கு கடந்த மாத இறுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியா தலைமையில் குழுவொன்று விஜயம் செய்தது. இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சந்திரானி பண்டார, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான …
Read More »ஒருமித்த தீர்மானம் எடுக்க களமிறங்குகின்றார் சந்திரிகா அம்மையார்!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் மாறுபட்ட நிலைப்பாடுகள் உருவாகியுள்ள நிலையில் அவற்றுக்கு முடிவுகட்டி ஒருமித்த தீர்மானமொன்றை எடுக்க களமிறங்கியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் சு.க வின் சிரேஷ்ட ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வெஸ்மினிஸ்டர் எனப்படும் பிரதமர் தலைமையிலான ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளது. அதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று …
Read More »