Friday , October 17 2025
Home / செய்திகள் (page 333)

செய்திகள்

News

தன்னை காவி என்று சொன்னவர்களுக்கு கமல் கொடுத்த பதிலடி

கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். எந்த ஒரு கேள்விக்கும் உடனே பதில் அளிக்கின்றார், இவருக்கு சமீப நாட்களாக கொஞ்சம் உடல்நலம் முடியாமல் ஓய்வில் இருக்கின்றார். இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பகுதியில் ‘பலரும் டெல்லி சொல்லும் உடையை நான் அணிந்திருக்கிறேன் என்று கேட்கிறார்கள். மேலும், கறுப்ப்கறுப்பு சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க’ என்று டெல்லியிலிருந்து சொல்கிறார்களாம். காந்தியைக்கூட …

Read More »

உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழப்பு …

உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி(46) என்ற பெண்ணுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவர் போலீசார் புகார் அளித்துள்ளார். கணவர் அழகேசன் அளித்த புகாரை அடுத்து கிழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 150 கிலோ எடையை குறைக்க ஆகஸ்ட் 23-ம் தேதி கீழ்பாக்கம் …

Read More »

தொடர்கிறது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்! வடக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கிறது பேராதரவு!!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை 18ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பில் மைத்திரி …

Read More »

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ்.பல்கலை மாணவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் நீதி வழங்கக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் குளப்பிட்டிப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். மாணவர்களின் ஓராண்டு நினைவு நிகழ்வு சுன்னாகத்தில் நேற்று மாணவன் சுலக்சனின் இல்லத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர்களின் கொலைக்கு நீதி …

Read More »

இனிப்புக் கொடுத்த இராணுவத்தினரிடம் கேப்பாபிலவு மக்கள் சரமாரியாகக் கேள்வி!

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இனிப்புக் கொடுத்த படையினரிடம் அவர்கள சரமாரியாகக் கேள்வியெழுப்பினர். இலங்கைப் படையினரின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேப்பாப்பிலவில் நிலைகொண்டுள்ள படையினரால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நேற்று இனிப்பு வழங்கப்பட்டது. இதன்போது பேராட்டக்காரரான ஆறுமுகம், படையினரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தார். “எப்போது எங்கள் இடங்களை விடுவீர்கள்” என்றார். இதற்குப் பதிலளித்த படையினர், “மிகவும் கஷ்டப்பட்டு உங்கள் வாழ் இடங்களில் இருந்த எங்களது முகாம்களை …

Read More »

ஒட்டுசுட்டானில் சுடலையை ஆக்கிரமித்துள்ளது இராணுவம்! – பொதுமக்கள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள வெடுக்குநாரி பொது மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்தப் பொதுமயானத்தை மீளக் கையளிக்கப் படையினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும், அந்தப் பகுதியில் புத்தரின் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒட்டுசுட்டான் கிராமவாசிகளும், முத்தயன்கட்டு கிராமவாசிகளும் வெடுக்குநாரி சுடலையைக் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்த நிலையில் 2009ஆம் ஆண்டு படையினர் ஆக்கிரமித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. …

Read More »

அமைச்சரவைக் கூட்டத்தில் ஐ.தே.க. – சு.க. அமைச்சர்களிடையே கடும் வாய்த்தர்க்கம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடும் வாய்த்தர்க்கம் நடந்ததால் கடும் அமளிதுமளி ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த வாக்குவாதங்கள் அமைச்சர்களிடையே நடந்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருப்பதால் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது …

Read More »

பிணைமுறி மோசடி விசாரணை: ஐ.தே.க. அமைச்சர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்!

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எதுவித தலையீடுகளையும் தம்மால் செய்யமுடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அதனை எதிர்கொண்டேயாக வேண்டுமென்றும், அதில் சமரசத்துக்கே இடமில்லையென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான …

Read More »

தாய்வான் வங்கி மோசடி: அரசசார்பற்ற நிறுவனமொன்றும் விசாரணைப்பொறிக்குள்!

தாய்வானில் பிரபல வங்கியொன்றில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒருதொகை இலங்கையிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ள இணைய மோசடி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. இந்த மோசடியுடன் தொடர்புட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இதனுடன் அரச சார்பற்ற நிறுவனமொன்றும் தொடர்புபட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த அரச சார்பற்ற நிறுவனம் கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒருபகுதியை தனது கணக்கில் வைப்பிலிட்டுக் கொண்டுள்ளதாகவும், குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இனிவரும் …

Read More »

புதிய அரசமைப்புக்கு ஆதரவு திரட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு மைத்திரி ஏற்பாடு!

ஜனாதிபதி

அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கைமீது விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்துக்கட்சி மாநாடொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார். ஜேர்மன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்புக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் தீவிர பிரசரங்களை முன்னெடுத்துவருவதுடன், நாட்டைப் பிளவுபடுத்துவதற்காகவே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது எனவும் சுட்டிக்காட்டிவருகின்றன. இதனால், …

Read More »