Friday , October 17 2025
Home / செய்திகள் (page 331)

செய்திகள்

News

நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையாகத் தெரியவில்லை – ஜெனிவாவில் சுமந்திரன்.

திரு.சுமந்திரனின் இன்றய பேச்சு அதிர்ச்சியை அளித்தது. இன்று ஸ்விஸ் அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர். இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ …

Read More »

விரைந்து பரவுகிறது டெங்கு வடக்கில் 7,000 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் இந்த வருடம் இதுவரை 7 ஆயிரத்து 8 பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மாகாணத் திணைக்களம் தெரிவித்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 4 ஆயிரத்து 999 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும், 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மாவட்ட சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் 14 பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் பிரிவின் …

Read More »

எந்தநேரத்திலும் ஆணைக்குழு முன் விளக்கமளிப்பதற்கு நான் தயார்! – பிரதமர் ரணில் தெரிவிப்பு

“பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு விளக்கமளிக்க, எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கின்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ரவி …

Read More »

உண்ணாவிரதக் கைதிகளை நேரில் பார்த்துக் கதறியழுதனர் உறவுகள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அவர்களது உறவுகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். உண்ணாவிரதக் கைதிகள் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் சிறைச்சலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நேற்று மாலை உறவுகள் பார்வையிட்டனர். கைதிகளைக் கண்டவுடன் அவர்களது உறவுகள் கதறி அழுதனர். கைதிகளும் விம்மி விம்மி அழுதனர். வவுனியா மேல்நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கை அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து …

Read More »

கிருஷ்ணகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி!

கிருஷ்ணகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஷ்வினி, கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாததால், கடந்த 11-ம் தேதி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் …

Read More »

​இரட்டை இலை விவகாரம்..

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான விசாரணையை வரும் 23ந்தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உருவான அணிகளால் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் ஒன்றாக இணைந்து இரட்டை இலையை மீட்க முயற்சித்து வரும் நிலையில், அதிமுக அம்மா அணியின் …

Read More »

​தமிழகத்தில் டெங்குவை தொடர்ந்து பன்றிக் காய்ச்சல்..!

டெங்கு காய்ச்சலை தொடர்ந்து தற்பொழுது தமிழகத்தில் பன்றிக் காய்சலுக்கு ஒருவர் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சின்ன தாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவர் அங்குள்ள தனியார் ஆலையில் எலட்ரீசியனாக வேலை செய்து வந்தார். கடந்த 2 வாரமாக தொடர் காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையால் முனிராஜ் அவதியுற்று வந்தார். இதனையடுத்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் …

Read More »

13 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் எனத் தெரிவித்து அச்சிறுமியின் தந்தைஈச்சங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருபவை வருமாறு:- வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வசித்துவந்த குடும்பமொன்றின் 13 வயதுச் சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாயார் மூன்று தடவைகள் தனியார் வைத்தியசாலையில் ஆலோசனை பெற்றிருந்தார். சிறுமி உடல் பலவீனமாகவுள்ளார் எனத் தெரி விக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதில் திருப்தியடையாத தாயார் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று …

Read More »

பேய்கள் வந்துவிடும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் துன்பங்களைச் சுமக்கமுடியாது! – மைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“பேய்கள், பிசாசுகள் வந்துவிடும் என்பதற்காகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பம், துயரம், அவலத்தைச் சுமந்தபடி வாழமுடியாது. அவர்களது துயரத்துக்கு ஒரு தீர்வு விரைந்து எட்டப்படவேண்டும். இனியும் அவர்கள் காவல் இருக்கமுடியாது.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். “தன்னைப் பலவீனப்படுத்தினால் உண்மையில் பலம் பெறப்போவது பேய்தான்” என்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …

Read More »

உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம்!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு சேர்க்கப்பட்டுள்ளபோதிலும் அங்கிருந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தைத் …

Read More »