தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் இன்று ஒரே நாளில் இரண்டரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தருமபுரி ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிஹரசுதன் டெங்கு காய்ச்சலால் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல காய்ச்சலுக்கு ராமநாதபுரம் மாவட்டம் அரியனேந்தலில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. …
Read More »அதிகாரப் பகிர்வு மக்களுக்கே! – அரசியல்வாதிகளுக்கு அல்ல என வவுனியாவில் மைத்திரி தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)
“அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல. அது மக்களைப் பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டைப் பிளவுபடுத்துகின்ற – துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக்கூடாது என்றும் கூறினார். வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் …
Read More »வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்யுங்கள் (படங்கள் இணைப்பு)
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோவிடம் சம்பந்தன் அழுத்தம் * படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் * காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வடக்கு, கிழக்கில் நிறுவப்பட வேண்டும் * தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருக்க முடியாது * நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு ஒரு சிலர் பிரயத்தனம் “நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை …
Read More »மன்னார் மாவட்ட கடல் உணவு ஏற்றுமதி தொடர்பில் விழிப்புணர்வு
மன்னார் நகரப்பகுதில் 2015 ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் நோய், தொற்றுகிருமிகள் காணப்படுவதன் காரணமாக நெருப்புக்காச்சல், வயிற்றோட்டம் போன்ற நோய்த்தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு அறிக்கைகளின் படி தெரிய வந்துள்ளதாக தேசிய நீரியல் வள ஆராட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மன்னார் மீன்பிடித்திணைக்கள கேட்போர் கூடத்தில் தேசிய நீரியல் வள ஆராட்சி நிறுவனத்தினால் இன்று சனிக்கிழமை மதியம் இடம் …
Read More »ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழு வவுனியாவில்
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவானது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவை சென்றடைந்துள்ளது ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில …
Read More »உணர்வு சார்ந்த போராட்ட முன்னெடுப்புக்களும்
சிவில் சமூக செயற்பாடுகள், செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஜனநாயகம் என்று சொல்லி, அல்லது நல்லாட்சி என்று சொல்லி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்வாறான அச்சுரூத்தல்கள் விடுக்கின்றமையானது நல்லாட்சி அரசாங்கம் தனது கையாளாகத்தன்மையை காட்டுவதாகவே எங்களுக்கு தெரிகின்ற என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் நேற்று வெள்ளிக்கிழமை(20) கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினால் விசாரனைக்கு உற்படுத்தப்பட்டார். …
Read More »வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வவுனியாவுக்கான விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுப்பு போடப்பட்டுள்ளதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமாலான்சவினதும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினதும் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று …
Read More »பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் கிடைக்குமா? அற்புதம்மாள் மனு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் கிடைத்தது. ஒரு மாதம் கிடைத்த பரோல் கடந்த மாதமே முடிவடைந்தாலும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பரோல் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க முதல்வரிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் …
Read More »மீண்டும் ஒலிக்கும் கருணாநிதியின் குரல் – திமுகவினர் ஆரவாரம்
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தன் காந்தக்குரலில் உரையாற்றுவார் என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் கோபால் தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் மற்றும் முதுமை காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்து வருகிறார். அந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். முரசொலி பவளவிழாவை …
Read More »மெர்சலில் ஜிஎஸ்டி காட்சிகள் திடீர் நீக்கம்: இன்கம்டாக்ஸ் ரெய்டு பயமா?
இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்திற்கு ரிலீசுக்கு முன்பே பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் ரிலீசுக்கு பின்னர் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி காட்சியால் மத்திய அரசின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர்கள் படக்குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் முரளிராமசாமி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி என்று கூறப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்கிவிடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் …
Read More »