Friday , October 17 2025
Home / செய்திகள் (page 328)

செய்திகள்

News

மைத்திரி – மஹிந்த விரைவில் நேருக்கு நேர் பேச்சு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்பு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பொது எதிரணி பக்கமிருக்கும் சு.க. உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையிலேயே, சு.கவின் மூத்த அமைச்சர்களின் மத்தியஸ்தத்துடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன்போது இணைந்து பயணிக்க வருமாறு மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஜனாதிபதி மைத்திரி …

Read More »

தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட அரசமைப்பே உருவாக வேண்டும்!

“வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சியை ஏற்றுக்கொண்ட அரசமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது. அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “தமிழ் பேசும் மக்கள் மிகுந்த …

Read More »

அரசியல் கைதிகள் விடயம்: விரைந்த தீர்வு அவசியம்

யாழ். பல்கலை

அரசியல் கைதிகள் விடயத்துக்கு விரைந்த தீர்வு அவசியம் என யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம்ஓர் அறிக்கையூடாகக் கோரியுள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:- “இலங்கைத் தீவில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்ட போதிலும், ஆட்சிக்குவரும் ஒவ்வொரு அரசுகளும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அசமந்த போக்கைப் பின்பற்றி வருவது நாட்டின் நல்லாட்சியையும் குறிப்பாக சட்டவாட்சியின் பொறுப்புக்கூறும் தன்மையையும் கேள்விக்கு …

Read More »

யாழ். பல்கலை மாணவர் சுட்டுக்கொலை: நீதி விசாரணையைத் துரிதப்படுத்துங்கள்

“யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.” – இவ்வாறு சட்டமாஅதிபரைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றது இலங்கை ஆசிரியர் சங்கம். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “கடந்த 2016.10.20 ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து வரும்போது கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்துச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், விஜயகுமார் சுலக்ஷன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக ஒரு வருடம் கடந்த நிலையிலும் மேல் நீதிமன்றத்தில் …

Read More »

நவீனமயமாகும் ராணுவ மையங்கள்…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டாயிரம் ராணுவ மையங்களை, நவீனப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 58 ராணுவ மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து மையங்களும் நவீனப்படுத்தப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி டெல்லியில் தொடங்கிய ராணுவ மாநாட்டில், விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மாநிலங்களுடன் தகவல் பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும், ராணுவத்தின் உள்கட்டுமானத்தை ஊக்கப்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரிகள் …

Read More »

விஜயுடன் மெர்சல் படத்தை பார்த்த கமல்..!

மெர்சல் திரைப்படம் குறித்த சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனை, நடிகர் விஜய் சந்தித்துள்ளார். விஜய் மற்றும் படக்குழுவினருடன் ‘மெர்சல்’ திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். இது தொடர்பான புகைப்படங்களை மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கமல்ஹாசன் மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கும்போது, உடன் இருந்தது வாழ்வின் முக்கிய தருணம் என குறிப்பிட்டுள்ளார். மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் தவறான தகவல்களையும் …

Read More »

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு காலதாமதம்! – பப்லோவிடம் ஒப்புக்கொண்டார் சபாநாயகர்

“மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளமை உண்மைதான்.” – இவ்வாறு உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்பிடம் நேரில் ஒப்புக்கொண் டார் சபாநாயகர் கரு ஜயசூரிய. இரண்டு வாரகால உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ …

Read More »

தனிநாடு அறிவிப்பை வெளியிடாமல் தடுக்க ஸ்பெயின் அரசு அவசர ஆலோசனை!

கேட்டலோனியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மக்களில் பெரும்பாலானோர் ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாக ஆக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கேட்டலோனியா மாநில அரசு விடுதலை அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ள அதேநேரத்தில் ஸ்பெயின் அரசு கேட்டலோனிய ஆட்சியைக் கலைத்துவிட்டுப் புதிதாகத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. நெருக்கடியான காலக்கட்டத்தில் இதுபற்றி விவாதிப்பதற்காக மாட்ரிட்டில் ஸ்பெயின் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைப் பிரதமர் மரியானோ ரஜோய் கூட்டியுள்ளார். கேட்டலோனியா ஆட்சியைக் கலைக்கும் அரசின் முடிவுக்கு …

Read More »

ரஜினி மெர்சலுக்காக பேசமாட்டார்; போர் வரும்போதுதான் பேசுவார் – சீமான்

மெர்சல் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசமாட்டார் என கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போர் வரும்போது மட்டுமே ரஜினி பேசுவார் என விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்த அவர், கட்டண விலை உயர்வால் மக்கள் திரையரங்கில் படம் பார்க்கும் நிலை இல்லை என்றும் கூறினார். இனிமேல் எல்லாரும் இணைய தளத்தில்தான் படம் பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் கூறினார். ராஜேந்திர …

Read More »

ஜேர்மனியில் மர்ம நபர் கத்தித் தாக்குதல்

ஜேர்மனியின் தென் பிராந்திய நகரான முனிச்சில், நபரொருவர் கத்தியால் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். எனினும், தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்தனர். திடீரென நடத்தப்பட்ட இத்தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், சைக்கிளில் தப்பியோடிய தாக்குதல்தாரியைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். எனினும், தாக்குதல்கள் வேறு எவராலும் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தினால், அப்பகுதி மக்கள் வீடுகளையும், கட்டடங்களையும் விட்டு …

Read More »