யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுப் பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினால் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது – 24) என்ற …
Read More »மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டது கூட்டமைப்பு !
புதிய அரசமைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து தெளிவுபடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், அந்தத் திட்டத்தை தற்போது அது கைவிட்டுள்ளது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைமீது அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், நாட்டில் நல்லிணக்கம் நிலவுவதற்கும் புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் …
Read More »மைத்திரியின் செயல் அரசியல் கைதிகளின் சிக்கலை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி!
“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து பெரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தும்கூட, அவர்கள் சார்ந்த பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மாறாக ஏனைய சிலரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியதானது அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் திசை திருப்பும் மற்றும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியேயாகும்.” – இவ்வாறு பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து விடுத்துள்ள ஊடக …
Read More »பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் சூடு
அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூட, ராகுல் காந்தி ‘டுவிட்’களுக்கு ரஷியா, கஜகஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து மறுடுவிட் வருவதை கிண்டல் செய்து, ‘‘ஒரு வேளை ரஷியா, இந்தோனேசியா, கஜகஸ்தானில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ராகுல் காந்தி திட்டமிடுகிறாரா?’’ என கூறி இருந்தார். இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் எம்.பி., செய்தி …
Read More »வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
நாட்டின் முதலாவது உள்துறை மந்திரி என்ற பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முதல்–மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் ‘‘ சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை நாட்டின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்பு மிகுந்த நாளாக கொண்டாட வேண்டும்’’ என கேட்டுக் …
Read More »வரிவிகித கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்
நாடு முழுவதும் ஒரே மறைமுக வரியாக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோஷத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரி முறையை ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்வகித்து வருகிறது. இந்த வரி முறையில் இருந்து உணவு தானியங்கள், பால், பழம் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி பொருட்களுக்கு, சேவைகளுக்கு 5, 12, 18, …
Read More »பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம்
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எம்.பி. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– உங்களது ஊழலுக்கு எதிரான போர் பற்றிய உறுதிமொழிக்கும், குறிப்பாக உயர்மட்டத்தில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து வழக்கு பதிவு செய்தமைக்காகவும் நாடு பெருமை கொள்கிறது. அதேசமயம் இந்த வழக்குகள் விசாரணையில் மிதமிஞ்சிய தாமதம் ஏற்படுவதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். குறிப்பாக ஏர்செல்–மேக்சிஸ், சாரதா சீட்டு கம்பெனி, ராபர்ட் வதேரா …
Read More »ஸ்பெயின் முடிவுகளை ஏற்கமாட்டோம் – கேடலோனியா தலைவர்
ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயின் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என கேடலோனியா அரசுத் தலைவர் கார்லஸ் புஜ்டெமோண்ட் அறிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியான கேடலோனியா தனிநாடாக மாற இம்மாதத் தொடக்கத்தில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. மாகாண அரசும், பல்வேறு அமைப்புக்களும் இந்த வாக்கெடுப்பை நடத்தின. ஆனால், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெயின் அரசும், உச்சநீதிமன்றமும் அறிவித்தன. இதைத் தொடர்ந்து மாகாண அரசின் அதிகாரங்களைக் குறைத்து ஸ்பெயின் பிரதமர் ரஜோய் …
Read More »“தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!” – யாழில் செவ்வாயன்று மீண்டும் போராட்டம்
தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திலிருந்து மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கடந்த 27 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. “உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!”, “அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்று!”, “அனைத்து …
Read More »இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தை குழப்பியடிக்கத் தயாராகிறது மஹிந்த அணி!
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீது எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த விவாதத்தையும், புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியையும் கைவிடுமாறு கோரி மஹிந்த அணியான பொது எதிரணி போராட்டம் நடத்தவுள்ளது. விவாதம் ஆரம்பமாகும் 30ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் முன்பாகவே குறித்த போராட்டத்தை நடத்துவதற்கு மஹிந்த அணி திட்டமிட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பாரிய அளவிலான மக்கள் தொகையையும் அந்தப் …
Read More »