Monday , October 20 2025
Home / செய்திகள் (page 326)

செய்திகள்

News

நமது இயக்கத்தில் இணையுங்கள்

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவ.7ம் தேதி அவரது பிறந்தநாளன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு செய்திதாளுக்கு அவர் அளித்த பேட்டியில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்வார்கள் என காத்திருந்தது போதும். நம்மால் முடியும். கடமையை செய்ய விரும்புபவர்கள் வாருங்கள். இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணம் இது. கடமையை செய்ய யார் முன்வந்தாலும் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். …

Read More »

வட்டுவாகல் கடற்படைமுகாம் வீதிமறியல் போராட்டம் கைவிடப்பட்டது

முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை உள்ளடக்கி மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்படை வலயத்துக்குட்பட்ட கோத்தபாய கடற்படை கப்பல் என்னும் கடற்படை தளத்துக்கு இன்றையதினம் நிரந்தரமாக காணி சுவீகரிப்பு பணிகள் நடைபெறவிருந்த நிலையில், குறித்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் கடற்படை முகாம் அமைக்க நிரந்தரமாக காணி சுவீகரிப்பு அளவீடுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் கடந்த வர்த்தமானி …

Read More »

வடமாகாண தொண்டராசிரியர்கள் போராட்டத்தில்.!

வடமாகாண தொண்டராசிரியர்கள் சிலர் இன்றைய தினம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் நேர்முகத் தேர்வின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 182 பேருடைய பெயர்கள் வெளியிடப்பட்டும் இதுவரை ஆசியரியர் நியமனங்கள் வழங்கப்படாததை அடுத்தே அவர்கள் இப் போராட்டத்தினை நடத்தினர். மாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று. அதில் 182 பேர் ஆசியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டனர். …

Read More »

தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி ராக்கி என்ற வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் கோபுரத்தின் மீது இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் மூலம் தனது மிரட்டல் காட்சியை நேரலை செய்தார்.தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் அவருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி …

Read More »

ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் மீட்பு

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தலென கெடுமவத்த பகுதியில் 7 வெற்று தோட்டாக்களை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர் கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்ஸிற்காக நின்றுக்கொண்டிருந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொலித்தீன் பையை பார்க்கும் பொழுது அதில் தோட்டாக்கள் இருந்ததை கண்டு உடனடியாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு …

Read More »

தமிழக ஆளுனருடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு

சமீபத்தில் தமிழக ஆளுனராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் சமீபத்தில் ‘மெர்சல் படத்தால் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், அதன் பின்னர் நடந்த வருமான வரி சோதனை குறித்து எச்.ராஜா, ஆளுனருடன் பேசியிருப்பாரா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் ஏற்படும் நிகழ்வுகளை …

Read More »

தேயிலை மலையை முறையாக பராமரிக்க கோரி தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் செம்புவத்தை தோட்ட தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து அத்தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை தோட்ட காரியாலயத்திற்கு முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்டிரதன் செம்புவத்தை தேயிலை மலை சில வருட காலமாக பராமரிக்க படாமல் காடாக மாறியிருப்பதால் தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் பயத்தால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் …

Read More »

பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பாலைச் சோலை பிரதேசத்தில் பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை நேற்று ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் கடந்த 21ஆம் திகதி சிறுமியை தந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டடையடுத்து சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் …

Read More »

கேரள கஞ்சாவுடன் பெண் கைது

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையில் இயக்கச்சி பகுதியில் வைத்து 32 வயதுடைய குறித்த பெண் 4.70 கிலோ கிராம் கஞ்சாவுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Read More »

புதிய அரசமைப்பு எப்போது வருகிறதோ அப்போதுதான் நாடு சுபீட்சம் அடையும்! சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

இலங்கையில் அனைவரும் சம பிரஜைகளாக வாழக்கூடிய புதிய அரசமைப்பு எப்போது உருவாகின்றதோ அப்போதுதான் இந்த நாடு சுபீட்சம் அடையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “புதிய அரசமைப்புக்கான முயற்சியில் நாம் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த நாட்டிலே ஒரு இன ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்பதற்காக புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசமைப்பின் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நாட்டில் …

Read More »