யாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக யாழ். அரியாலை பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை 28 வயதான இளம் தாய், தனது 4 வயதான பெண் குழந்தைக்கும், 2, 1 வயதுகளையுடைய ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு …
Read More »முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரத்தின் கருந்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் ஜம்மு காஷ்மீர் மக்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்பது நியாயமானது தான் எனவும், அது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யலாம் என கூறியிருந்தார். அவரது கருத்திற்கு பதில் அளித்த ஸ்மிருதி இரானி கூறுகையில், சிதம்பரம் கூறிய கருத்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. வல்லபாய் படேல் இந்தியா முழுவதும் ஒரு …
Read More »“காஷ்மீருக்கு சுயாட்சி அளிக்க வேண்டும்” ப.சிதம்பரம் கோரிக்கை; பா.ஜனதா கண்டனம்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘காஷ்மீரில் உள்ளவர்கள் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது, தங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை. அவர்களுடன் நான் உரையாடியபோது, பெரும்பாலானோர் சுயாட்சியை விரும்புவதை உணர்ந்தேன். நானும் கூட அதையே விரும்புகிறேன்’ என்று கூறினார். இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் …
Read More »கேட்டலோனியா மாநில அரசு கலைக்கப்பட்டதாக அறிவிப்பு!
கேட்டலோனியா மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும் வரும் டிசம்பர் 21ஆம் தேதி அம்மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலைபெறுவது குறித்த கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு கேட்டலோனியா மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதை ஸ்பெயின் ஏற்காத நிலையில் கேட்டலோனியா விடுதலையடைந்ததாகத் தன்னிச்சையாக அறிவித்தது. இதையடுத்து அந்த மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும், மீண்டும் …
Read More »திருமண விழாவில் பங்கேற்கிறார் கருணாநிதி
உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சுவாசப் பிரச்னை காரணமாக அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்த …
Read More »316 புதிய மருத்துவர்கள் நியமனம்…
அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில், 316 மருத்துவர்களுக்கான பணி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்படுள்ள மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் …
Read More »காலம் கனியும் போது கட்டாயம் திருமணம் நடக்கும் ; ராகுல் காந்தி
தனக்கு எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்போது நடக்கும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 47 வயது ஆகும் நிலையில், அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் விதியின் மீது நம்பிக்கை …
Read More »கதிர்காம சர்ச்சை குறித்து ஆராய விசேட குழு
கதிர்காமம் கோயிலினுள் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது சில வாரங்களுக்கு முன் கதிர்காமம் கோயிலில் காலை தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, கோயில் கதவைத் திறப்பதில் கோயில் நிர்வாகத் தரப்புக்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்கு நிலையான அபிவிருத்தி, வனவிலங்குகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா விசேட குழுவொன்றை …
Read More »இந்தியா புறப்பட்டார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இந்தியா புறப்பட்டார். அவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றுள்ளார். சர்வதேச பெளத்த கலாசார சம்மேளனம் மகராஷ்டிரா மாநிலத்தில் நடத்தவுள்ள பெளத்த கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்தியா செல்கின்றார்.
Read More »புகையிரதம் மோதி வயோதிபர் பலி!
சிலாபம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (26) மாலை வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் போமுல்லையைச் சேர்ந்த எச்.ரத்நாயக்க (63) என்று தெரியவந்துள்ளது. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது விபத்தா, தற்கொலையா என்று விசாரணை நடத்திவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More »