யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்தன. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று கொன்ஸ்டபிள் ஒருவரும், உப பரிசோதகர் ஒருவரும் …
Read More »வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இதில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது. போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ள நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை …
Read More »நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை – வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேர், கோவிளம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் …
Read More »உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று பிரதமர் மோடி
புதுடெல்லியில் உலக உணவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது: உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜிஎஸ்டி சட்டம் இயற்றப்பட்டது. இதனால் தொழில் வர்த்தகம் செய்வது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது. உலக வங்கி தொழில் வர்த்தகத்துக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்ட …
Read More »கருணாநிதி வீட்டில் வெள்ளம் புகுந்தது
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு கோபாலபுரத்தில் உள்ளது.நேற்று பெய்த மழையில் வீட்டு காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது சென்னையில் நேற்று இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. குடிசைப் பகுதிகள் மட்டுமின்றி வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அண்ணாநகர், அடையார், போயஸ்கார்டன், கோபாலபுரம், போட்கிளப், பெசன்ட்நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் வசதியான வர்கள் …
Read More »பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் இனிமேல் கூட்டமைப்பு இடமளிக்காது
நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக் கொடுப்புகளையும் செய்துள்ளோம். இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
Read More »இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிப்பு!
கடந்த திங்கட் கிழமை இடைக்கால அறிக்கை மீதான விவாதம் ஆரம்பமாகிய போதும் எல்லா உறுப்பினர்களது கருத்துக்களையும் பெறும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறும் என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த விவாதம் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை
தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது. சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு வானிலை அப்படியே மாறியது …
Read More »பயங்கரவாதிகள் தாக்குதல்: ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயம்
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் லஸிபல் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து அவர்கள் வந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் சுட்டதால் வாகனத்தின் கதவில் இருந்த கண்ணாடிகள் தெறித்து 2 …
Read More »எப்பல்’ போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
இளையோர் போதைக்காகப் பயன்படுத்தும் எப்பல் எனும் போதை மாத்திரைகளுடன் கடவத்தைப் பேருந்து நிலையத்தில் சந்தேக நபரைத் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினர் கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாகக் கடவத்தைப் பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 400 எப்பல் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பகா மாவட்டத்தின் …
Read More »