Monday , October 20 2025
Home / செய்திகள் (page 319)

செய்திகள்

News

கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று பூமி மாறும்: மீண்டும் பீதியைக் கிளப்பும் விஞ்ஞானி

பூமி தொடர்ந்தும் வெப்பமயமாகி கொண்டே இருந்தால் 2600ஆம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் மீண்டும் கூறினார் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், பூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கபடி எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. …

Read More »

எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வழங்கும் மைத்திரி!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையினால் தான் நன்றாக மக்களிடம் திட்டு வாங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித்த தேரரின் இரண்டாவது நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதாக சிலர் சிந்திக்கின்றனர். மக்கள் அவ்வாறு சிந்திப்பதில் தவறில்லை. வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம் செய்தால் என்னை தான் திட்டுகின்றனர். மருந்து வழங்குவது நான் என நினைக்கின்றார்கள். பாடசாலையில் …

Read More »

என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் கமல்ஹாசன் வேண்டுகோள்

இன்று கமல்ஹாசனுக்கு 63வது பிறந்த நாளாகும். இந்த நாளில் வழக்கம் போல நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருந்தனர் கமல் நற்பணி இயக்கத்தினர். ஆனால் மக்கள் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, அதை மாற்றத்துக்கான நாளாக மாற்றுங்கள் என்று தன் …

Read More »

தென்கொரியாவில் அமெரிக்க படை தளத்தினை பார்வையிட்டார் டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களை தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறார். இதற்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. வடகொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் அமெரிக்காவை தாக்க கூடிய வலிமை கொண்டவை என கிம் ஜாங் உன் கூறினார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 12 நாள் ஆசிய பயணத்தின் …

Read More »

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது

காஷ்மீரில் கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரம் மூண்டது. கலவரத்தில் 90 பேர் பலியானார்கள். இதுபற்றிய விசாரணையின்போது, காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பிரிவினைவாதிகள் உள்ளிட்டோர் நிதி திரட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஒரு கும்பல் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக …

Read More »

மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செல்ல தடை.. மக்களை அச்சுறுத்தும் இராணுவம்!

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் சென்று மாவீரர்களான தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவத் தடைகளும், அச்சுறுத்தல்களுமே தொடர்ந்தும் காணப்படுவதாக மாவீரர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவு கூறவுள்ளதால் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்றைய தினம்(06) சென்றுள்ளனர். எனினும், மாவீரர்களின் உறவினர்களை இராணுவத்தினர் மாவீரர் …

Read More »

நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறார் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. அதனையடுத்து. பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள் பொது மக்கள் …

Read More »

அரசை கேலி செய்யாதீர்கள், கள வீரர்களுக்கு சலாம்! நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அரசின் சில பொறுப்பற்ற செயல்களை குறி வைத்து ட்விட்டரில் கருத்துக்களை அதிரடியாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நிகழ்வுகள் மூலம் களத்திலும் நேரடியாக இறங்கிவிட்டார். அவரின் செயல்பாடுகள், அறிவிப்புகளுக்கு சில எதிர்ப்பும் தெரிவித்துவருகிறார்கள். தற்போது அவரின் மீது சில வழக்குகளும் பாய்ந்துள்ளது. நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்கு முடிவுகள் கூறியுள்ளார்கள். இந்நிலையில் அவர் ட்விட்டரில் இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ …

Read More »

சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது!

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. இந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:- மழை காலங்களில் வெள்ள சேதம் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனக்கு தெரிந்த சில நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் குளங்கள், ஏரிகளை செப்பனிட என்ன செய்ய வேண்டுமோ அதற்கு உதவி செய்வார்கள் மற்ற மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்யும் அரசு தமிழகத்திற்கு ஏன் மறுக்கிறது. அரசியல் …

Read More »

இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு! போக்குவரத்து ஸ்தபிக்கும் அபாயம்

இலங்கையில் தரமற்ற எரிபொருள் இறக்குமதி மூலம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு பூராகவும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்… இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன. அதற்கமைய உந்துருளி ஒன்றுக்கு 2 லீற்றர் பெற்றோலும், முச்சக்கர வண்டிக்கு 3 லீற்றர் பெற்றோலும், சிற்றூர்ந்துகளுக்கு 20 லீற்றர் பெற்றோலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. …

Read More »