Sunday , October 19 2025
Home / செய்திகள் (page 318)

செய்திகள்

News

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்!

Maithripala Sirisena

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்துள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தனி தமிழீழம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு – நாராஹேனபிட்ட இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “சமகாள அரசாங்கம் இராணுவத்தை …

Read More »

பிரான்சில் மாணவர்கள் மீது கார் மோதி தாக்குதல் பலர் காயம்

பிரான்சின் டுலூஸ் நகரின் அருகே அமைந்துள்ள கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் மீது நபர் ஒருவர் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டுலூஸ் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறிருவர் ஆபத்துகட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்து தொடர்பில் 28 …

Read More »

பட்­ஜட்டை சாத­க­மாக பார்க்­கின்றோம் : கூட்­ட­மைப்பு தெரி­விப்பு

எதிர்­வரும் 2018 ஆம் ஆண்­டுக்­காக கூட்­ட­மைப்­பி­டத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட கருத்­துக்கள் வரவு–செல­வுத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை சாத­க­மாக பார்ப்­ப­தாக ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை சமர்ப்­பிக்­கப்­பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு–செல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போது நல்­லி­ணக்­கத்­தினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடு­ப­ட­வேண்­டிய நிலை­மைகள் உள்­ளன. அத­ன­டிப்­ப­டையில் எமது தரப்பின் கருத்­துக்­க­ளையும் வரவு …

Read More »

மக்களுக்கு புரியும்படி கமல் பேச வேண்டும்: இளங்கோவன் கருத்து

கோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது: நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், அவர் மக்களுக்கு புரியும்படி பேசினால் நன்றாக இருக்கும். சென்னை மக்கள் வெள்ளத்தால் அவதியுறும் போது, சேலத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். நிலைமை இப்படி இருந்தால், வெள்ள நிவாரண பணி எப்படி சரியாக நடைபெறும் என்றார்.

Read More »

நாடாளுமன்றத்துக்கு சைக்கிள்களில் வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிள்களில் வருகை தந்திருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து, பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எடுத்துக்காட்டும் விதமாக மஹிந்த அணியினர் இவ்விதம் சைக்கிள்களில் நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. நல்லாட்சி எனக்குறிப்பிடப்படும் …

Read More »

நாமல் தமிழில் கேட்ட கேள்வி! தக்க பதிலடி கொடுத்தார் சம்பந்தன்

ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும், பிரச்சினைகள் உருவாகுவதற்கு அடிப்படைக் காரணம் ஓர் அரசியல் தீர்வு ஏற்படாமையே ஆகும். எனவேதான் அரசியல் தீர்வு விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தவேண்டியது எமது கடமை என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவரிடம் தமிழில் ஒரு கேள்வியை எழுப்பியிருநதார். “அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதைக் காரணங்காட்டி தமிழ் மக்களின் …

Read More »

அமெரிக்க நகரத்தில் சீக்கியர், மேயர் ஆனார்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் …

Read More »

இரட்டை இலை சின்னத்திற்கும் வருமான வரி துறை சோதனைக்கும் தொடர்பில்லை

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் …

Read More »

என்னை பற்றிய குறைகளையும் மக்கள் கூறலாம்: செயலியை அறிமுகப்படுத்தி கமல் பேச்சு

புதிய செயலியை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன் அதன் மூலம் தன்னை பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் கூறலாம் என தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு நேற்று 63-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் அவர் நற்பணி மன்றம் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் புதிய செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பேசினார். அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனையை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். நிறைய விடயங்களை கற்றுக்கொள்வதற்காக தான் சுற்றுப்பயணம் …

Read More »

மன்னாரை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய அச்சுறுத்தல்: கடந்த வருடத்தை விட பாதிப்பு அதிகம்

யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016ஆம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்த மலேரியா அச்சுறுத்தல் தற்போது யாழ். மாவட்டத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பில் …

Read More »