தமிழகத்தின் தூத்துக்குடி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒன்பது பேர் இராமேசுவரத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச்சென்றது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது. இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்களில் உள்ள சிலர் தங்களது உறவினர்களைப் பார்க்க இராமேசுவரத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு சென்று விடுகின்றனர். இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி இலங்கை தமிழர்கள் முகாமில் …
Read More »பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே …
Read More »ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணையுமா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இன்று பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, லசந்த அலகியவன்ன ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்பில் தான் …
Read More »சிவனொளிபாதமலை செல்லும் யாத்திரிகர்களின் வாகனங்கள் சோதனை
சிவனொளிபாதமலை பருவகாலம் அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு மஸ்கெலியாவிலிருந்து சிவனொளிபாதமலை வரை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தீடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நுவரெலியா மாவட்ட வாகன பரிசோதகர்களுடன் மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் தொடக்கம் தீடீர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். சிவனொலிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகளுக்கு பாதுகாப்பான சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றைய தினம் 50 மேற்பட்ட வாகனங்கள் …
Read More »விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை பூனேவில் கைது!!
பிரபலமில்லாத தமிழ் பட நாயகி ஒருவர் பூனேவில் உள்ள விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீஸார் அவரை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் வாடா செல்லம். இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், கரோலின் நாயகியாகவும் நடித்தனர். இந்த தமிழ் படத்தில் மட்டுமின்றி ஆடை விளம்பரங்களிலும், நகை கடை விளம்பரங்களிலும் நடித்துள்ளார் கரோலின். இந்நிலையில், பூனேவில் உள்ள ஒரு …
Read More »நான் ஜெ.வின் மகள் என்பது ஓ.பிஎஸ்-ற்கு தெரியும் – அடுத்த குண்டு வீசும் அம்ருதா
தான் ஜெ.வின் மகள் என்பது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரியும் என பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா தெரிவித்துள்ளார். தன்னை மறைந்த ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கும் படி பெங்களூரை சேர்ந்த அம்ருதா (30) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளரிடம் பேசிய அம்ருதா ““நான் ஜெ.வின் மகள் என்பது கடந்த மார்ச் மாதம்தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து …
Read More »டிடிவி தினகரன் ஆதரவு எம்பி-க்கள் முதல்வருக்கு ஆதரவு? இரட்டை இலையால் புது திருப்பம்!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தேர்தல் ஆணையம் விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே ஒதுக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில், ஆர்கே.நகர் தேர்தலில் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டிடுவார் என கூறப்படுகிறது. தினகரனும் எனது ஆதரவாளர்கள் …
Read More »யாழ். பல்கலை வவுனியா வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்தார். பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 மணிக்கு முன்னர் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பிலான விசாரணைகள் நாளை ஆரம்பிக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் …
Read More »யாழில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் மர்மம்
மானிப்பாய் சங்கம்வேலி பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 3 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீண்ட நேரமாக சிறுவனை காணாமல் தேடிக்கொண்டிருந்த பெற்றோர் கிணற்றை பரிசோதித்த போது சிறுவன் கிணற்றிற்குள் சடலமாக மிதப்பதனை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், காவல் துறையினருக்கு அறிவித்ததன் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கிணற்றினை சுற்றி …
Read More »ஆவா கும்பலின் மேலும் இரு உறுப்பினர்கள் கைது
குற்றச்செயல் ஒன்றிற்காக வாள் ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் இன்று அதிகாலை சாவகச்சேரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்யும் வேளையில் குறித்த நபர்கள் வைத்திருந்த வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் …
Read More »