எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டு அடாவடி செய்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணு ஆயுதங்களை சோதித்து வருகிற அந்த நாடு, உலக நாடுகளை அதிர வைத்து வருகிறது. இந்த நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனையை நேற்று மீண்டும் நடத்தியது. தனது கடல் …
Read More »வடக்கில் அரச பேருந்து சேவைகள் இன்றும் இல்லை
வட மாகாணத்தின் அரச பேருந்து பணியாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. வட பிராந்திய பேருந்து சாலை பிரதான அதிகாரிகள் இரண்டுபேரை இடமாற்றம் செய்யக் கோரியே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை. இந்தநிலையில் இன்றும் இந்த போராட்டம் தொடர்வதாக, வவுனியா பேருந்து சாலையின் நேரக் கட்டுப்பாட்டாளர் ஜெசிகரன் தெரிவித்துள்ளார்.
Read More »தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம்
வேட்புமனு கோரப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 7 மாநகர சபைகள் 18 நகர சபைகள் மற்றும் 68 பிரதேசசபைகள் அடங்கலாக மொத்தமாக 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »5 இலட்சம் ரூபாய்க்கு புதிய மின்சார கார்
உலகின் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய கார் கருதப்படும் நேனோ கார் வாகனங்களின் அடுத்த தயாரிப்பாக மின்சார நேனோ கார் இந்திய சந்தைக்கு இன்று அறிமுகப்படுத்திவைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஹதராபாத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசின் சிறப்பு தீர்மானத்தின் படி எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் எரிபொருளில் இயங்கும் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த …
Read More »குழப்பமான காலநிலை தொடரும்
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் மழையுடன் கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறித்த சந்தர்ப்பத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் , கிழக்கு , ஊவா , வடக்கு …
Read More »யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு : இருவர் கைது.!
யாழ். பஸ் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக குடு வகை போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை பிராந்திய பொலிஸ்மா அதிபரின் கீழான போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்றைய தினம் நண்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து குறித்த போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 60 …
Read More »விபத்தில் சிக்கிய ஆறுபிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலத்துக்கு அருகாமையில் இன்று மதியம் 1.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தியாவட்டவான் மையவாடி வீதியில் வசிக்கும் ஆறு பிள்ளைகளின் தயாரான றலீனா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மருந்து பெற்றுக்கொண்டு தனது வசிப்பிடமான தியாவட்டவான் பிரதேசத்தை நோக்கி, கணவருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, இவர் விபத்தக்கு உள்ளாகியுள்ளார். காத்தான்குடியில் இருந்து பொலனறுவைக்கு கொண்டு …
Read More »ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை – கோவையில் அதிர்ச்சி
ஆசிரியர் திட்டி காரணத்தில் அரக்கோணத்தை சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த கலெக்டர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டம் சோமனூரில் 12ம் வகுப்பு படித்து வரும் அருள்செல்வன் என்ற மாணவரை, வேதியியல் ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த அருள்செல்வன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரின் …
Read More »ஒப்பந்தத்தை மறுத்தமையே இந்தியாவுடனான போருக்கு காரணம்!- த ஹிந்து
1987 ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்தமை இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையிலான ஒரு போருக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிரபாகரனுக்கு உறுதியான ஆதரவு வழங்கியதாக ஆயுதக் குழு கூறியிருந்தது. சென்னை வி.ஓ.சி. நூலகத்தினால் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் மற்றும் பிரகாகரனின் வரலாறு அடங்கிய புத்தகம் ஒன்று விரைவில் வௌியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திரட்டப்பட்ட ஆவணங்களில் …
Read More »வடக்கில் அரச பேருந்து இயக்குனர்கள் வேலை நிறுத்தம்
அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை முதல் ஆரம்பித்தனர். வட பிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
Read More »