Saturday , October 18 2025
Home / செய்திகள் (page 305)

செய்திகள்

News

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐ.நா. செயற்­குழு இலங்கை வரு­கி­றது.!

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­கு­ழுவின் மூவர் கொண்ட உறுப்­பி­னர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திக­தி­வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்­பிடும் நோக்­கி­லேயே இந்த செயற்­கு­ழுவின் விஜயம் அமை­ய­வுள்­ளது. ஜோஸ் அன்­டோ­னியோ லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். ஐக­கிய நாடு­களின் இந்த …

Read More »

போர்க்குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணம் செய்யப்பட்டதால் நீதிபதி முன்னே விஷம் அருந்தி முன்னாள் ராணுவ தளபதி தற்கொலை

கடந்த 1992 – 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போரின் போது 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐநா தீர்ப்பாயம் ஒன்றை அமைத்தது. இந்த போர் நடைபெற்ற சமயத்தில் போஸ்னிய ராணுவத்தின் தளபதியாக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக …

Read More »

மின்தடை : திருத்தப்பணிகள் தாமதமாகுமாம் !

மின்தடை ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் தாமதமேற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்றபட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையையடுத்து மரங்கள் முறிந்து மின்சாரக்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்கள் மீது விழுந்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ள கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீளவழங்குவதில் தாமதமேற்பட வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. …

Read More »

மீட்புப் பணிகளுக்கு பொலிஸார் தயார் நிலையில்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை தொடர்ந்து நீடித்தால், பொலிஸ் உத்தியோகத்தர்களை அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சட்ட ஒழுங்குகளுக்கான அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் திடீரென ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால், அங்கு உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்குமாறு …

Read More »

விடிய விடிய கனமழை: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஏழு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக இன்று நடைபெறவிருத …

Read More »

பதினைந்து பேர் தேசிய வைத்தியசாலைகளில்!

நிலவும் அசாதாரண காலநிலையால், பதினைந்து பேர் தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென வீச ஆரம்பித்த காற்று, அதனுடன் கூடிய கடும் மழை என்பவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை பதினைந்து பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதிய போக்குவரத்து வசதிகளை உடனடியாகப் பெற முடியாததால், பாதிக்கப்பட்ட பலர் இன்னும் மருத்துவ உதவிகளைப் பெற முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Read More »

தாழமுக்க அனர்த்தம்! சுழல்காற்றினால் உடைமைகள் சேதம்!

தாழமுக்கம் காரணமாக தற்போது இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை, நுவரெலிய பகுதியிலும் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது. கொழும்பு, தெஹிவளை பகுதியிலும் கடுமையான காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளில் மர முறிவு ஏற்பட்டதால் போக்குவரத்திலும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் …

Read More »

அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை

அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். கடல் அதிக சீற்றத்துடன் …

Read More »

ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு நேற்று இரவு அழைத்துவரப்பட்டுள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முஸ்லிம் இளைஞன் என நம்பப்படும் இக்ரம் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும், கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே, குறித்த நபர்களை கைதுசெய்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் தீவிர …

Read More »

அம்ருதாவின் தாய் ஜெ.வின் சகோதரிதானா?

பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவரின் தாய் சைலைஜா, ஜெயலலிதாவின் சகோதரி அல்ல என கர்நாடக அதிமுக செயலாளரும், தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். இந்நிலையில், தினகரனின் …

Read More »