டிசம்பர் மாதம் வந்தாலே கூடவே பயமும் வந்துவிடும். பெரும்பாலான இயற்கை பேரிடர், அழிவுகள் டிசம்பரில்தான் நடந்துள்ளது. இந்த நிலையில் இன்றுதான் டிசம்பர் மாதம் பிறந்துள்ளது. அதற்குள் மனிதர்களை பயமுறுத்துவதை போல இன்று ஒரே நாளில் ஆறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா, சிலி நாட்டில் உள்ள வால்பரைசோ, தென்கிழக்கு இந்தியன் ரிட்ஜ் பகுதியில் உள்ள கடலிலும், நியூ கலிடோனியாவில் உள்ள டாடின் என்ற பகுதியிஉம், மெக்சிகோவை சேர்ந்த …
Read More »ஓகி புயல் எதிரொலி: 270 மீனவர்கள் மாயம்; கேரளாவையும் விட்டுவைக்காத சோகம்!!
கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள ஓகி புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஓகி புயலின் தாக்கம் கேரளாவையும் ஆட்டிப்படைத்துள்ளது. ஓகி புயல் திருவனந்தபுரம் அருகே 60 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதால், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொச்சி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி …
Read More »“நபி அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை வழிமுறை முக்கியமானதாகும்”
நபி அவர்களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முஹம்மத் நபி அவர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழிமுறை எந்தளவு முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது; இஸ்லாமிய சமய நம்பிக்கையின் படி இறைவனால் முஹம்மத் நபி அவர்கள் இஸ்லாத்தின் இறுதி நபியாகக் தெரிவுசெய்யப்பட்டதுடன், …
Read More »பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது
இலங்கையில் பல்வேறு சமூக, கலாசாரங்களைக்கொண்ட மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இது சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுடன், பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது, பண்டைய காலம் முதலே எமது இந்த அழகிய தேசம் பல்வேறு சமய, கலாசார …
Read More »வீட்டிலிருந்த பெண் சுட்டுக்கொலை
கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றிரவு, கொட்டாவை, பாலிகா வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் வீட்டிற்குள் சம்பவதினமான நேற்று இரவு உள்நுழைந்த இனந்தெரியாத இருவர் குறித்த பெண் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண்ணொருவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார், …
Read More »அம்ருதா ஜெ.வின் மகள்தான் – ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு பேட்டி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என ஜெ.வின் நீண்ட நாள் தோழி கீதா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். இந்நிலையில் இதுபற்றி சென்னையில் வசிக்கும் …
Read More »“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்ற ஐவர் கைது
கல்கமுவ பிரதேசத்தில் ” கல்கமுவே தல புட்டுவா” என அழைக்கப்படும் யானையொன்றைக் கொன்றமை தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை அம்பன்பொல பொலிஸார் கைதுசெய்துள்னர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து யானையின் தந்தம் மற்றும் யானைத் தந்தங்களை வெட்டுவதற்கு பயன்படும் வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாகவும் அனைவரும் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »மாட்டிறைச்சி தடை: வாபஸ் வாங்கும் மோடி அரசு??
நாடு முழுவதும் இறைச்சிக்காக பசு, எருமை, ஒட்டகம், காளை, உள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்த இறைச்சிக்காக மாடுகள் கொல்வதை தடை செய்யும் உத்தரவு வாபஸ் பெறப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாராஷ்டிர அரசு மாட்டிறைச்சிக்காக பசுக்களை விற்க தடை விதித்தது. இதன் பின்னர், கடந்த …
Read More »பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்? 4 பேர் பலி
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஹக்கானி வலைச்சமூகத்தினர் என்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை முழுமையாக ஒடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இது தொடர்பாக பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு கொள்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டபோதும், இதை சுட்டிக்காட்டியது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையோரம், அப்பர் குர்ரம் பகுதியில் அமைந்துள்ள ஹக்கானி வலைச்சமூகத்தின் மூத்த தளபதி அப்துர் ரஷீத் …
Read More »பெப்ரவரியில் தேர்தல் !
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தற்போதுவரை 93 …
Read More »