Friday , October 17 2025
Home / செய்திகள் (page 298)

செய்திகள்

News

இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து ஆராய ஐ.நா. குழு இன்று இலங்கை வருகிறது

இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய்வதற்கென ஐக்கியநாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் குழு ஒன்று இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றது. குறித்த குழு, வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று தமது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இள­வ­ரசர் ஹரி, மெகான் திரு­மணம்

பிரித்­தா­னிய இள­வ­ரசர் ஹரி­யி­னதும் அவ­ரது காதலி மெகான் மெர்­கி­ளி­னதும் திரு­மணம் 7 வரு­டங்­க­ளுக்கு மேல் நீடிக்­காது எனத் தெரி­வித்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள லண்டன் தேவா­லய ஆயர் ஒருவர் திரு­ம­ணத்தில் இணையப் போகும் அவர்­க­ளுக்கு வாழ்த்­து­க்களைத் தெரி­விக்க மறுத்­துள்ளார். லண்டன் தேவா­ல­யத்தின் பிரதி ஆய­ரான பீற் புரோட்­பென்ட்­டிடம் (65 வயது) நீங்கள் எதிர்­வரும் ஆண்டு திரு­மண பந்­தத்தில் இணை­ய­வுள்ள ஹரி மற்றும் மெகா­னுக்கு அவர்­க­ளது மகிழ்ச்­சி­க­ர­மான வாழ்­ வுக்கு வாழ்த்­துக்­களைத் …

Read More »

சிவனொளிபாதமலைக்கு கஞ்சா

சிவனொளிபாதமலைக்கு கஞ்சா போதைப்பொருளை தம்முடன் எடுத்துச் சென்ற நால்வரை அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சிவனொளிபாதமலை பருவகாலம் நேற்று உதயமான பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமானது. ஆரம்பமான முதல் தினத்திலிலேயே 750 மில்லிகிராம் கஞ்சா போதை பொருள் கொண்டு சென்ற நான்கு பேரை நோட்டன்பிரிஜ், தியகல பிரதேசங்களில் வைத்து அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். மத்திய மாகாண கலால் திணைக்கள ஆணையாளர் காமினி அதிகாரி, நுவரெலியா கலால் திணைக்கள …

Read More »

2020 இல் கோத்தா நாட்டின் தலை­வ­ரா­கு­வாரா?

கோத்தபாய

2020 ஆம் ஆண்டு யார் இலங்­கையின் தலை­வ­ராக வருவார் என்ற வகையில் எவ்­வி­த­மான ஆய்­வையும் கருத்­துக்­க­ணிப்­பையும் கொழும்பு பல்க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு மேற்­கொள்­ள­வில்லை என்றும் அது­தொ­டர்பில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும் தாம் எந்தப் பொறுப்­பையும் ஏற்க மாட்டோம் என்றும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத் தின் கலைப்­பீட ஊட­கத்­து­றைப் ­பி­ரிவு தெரி­வித்­தி­ருக்­கின்­றது. கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பொன்றில் 2020 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலை­வ­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய …

Read More »

பிரபாகரன் பிடிபடவில்லை அப்போ போர் இன்னும் ஓயவில்லை – சிங்கள இராணுவத் தளபதி எழுதிய நூல்.

இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 …

Read More »

பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தமுடியும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன்!

கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும் என்று யாழ் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நடைபெற்ற பெற்றோர் தின விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றும் போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உறுதுணையாகச் செயற்பட்டுவரும் பெற்றோர்களுக்கு நினைவுப் பரிசில்களை வழங்கி கௌரவித்ததைத் தொடர்ந்து அமைச்சர் அங்கு பேசுகையில்… பாடசாலை ஆசிரியர்களும் …

Read More »

சனநாயக போர்முறை வெளிகளை தமிழ்ப் புத்திஜீவிகளும் மக்கள்நல தொண்டர்களும் மிகை நிரப்ப வேண்டும்

யேர்மனியில் மாவீரர்நாள் உரையில் தயாமோகன். உலகப் போரியல் ஒழுக்க மாற்றம், உலக அரசியல் நகர்வு, உலகப் பொருளாதார நகர்வு போன்றவை கணக்கில் எடுக்கப்பட்டு, எமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறைப் போர் திட்டமிட்டு நசுக்கப்பட்டது. ஆனால் இன்று எம்முன்னே பல சனநாயக போராட்ட வெளிகள் விரிந்து கிடக்கின்றது. இப்போர்முறை வெளிகளை தமிழ்ப் புத்திஜீவிகளும், மக்கள் நலத் தொண்டர்களும் மிகை நிரப்ப வேண்டும். யேர்மனியில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவெழுச்சி …

Read More »

தமிழரசின் இரண்டாம் கட்ட தலைமைகள் போர்க்கொடி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று பங்கிட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஏதும் எஞ்சப்போவதில்லையென தமிழரசின் இரண்டாம் கட்ட தலைமைகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 சபைகளையும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒரு சபையினையும் கோரவுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பானது யாழ்ப்பாணத்தில் 3 சபைகளின் தவிசாளர் பதவிகள் உள்ளிட்ட இடங்களையும் கிளிநொச்சியில் ஒரு சபையினையும் …

Read More »

தங்கவேட்டை நிறுத்தப்பட்டது

முல்லைத்தீவு நகருக்கு அருகிலுள்ள ஆற்றுப் பகுதியில் தமிமீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் தங்கம், மற்றும் பணம் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு இணங்க, தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், கடந்த சில நாட்களாக பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்ணை தோண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும், இதுவரை எதுவும் கிடைக்கப் பெறாமையால், இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் பொலிஸாருக்கு …

Read More »

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டில் முன்னாள் புலிகள்

முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையுடன் இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்​கோன் தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »