கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8.30 மணியளவில் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனினும் பரீட்சார்த்திகள் 8 மணியளவில் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும். பரீட்சைக்கு சமுகமளிக்கும்போது பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள …
Read More »ஆர்.கே.நகரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்!!
ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த முறை பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்ற காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த முறையும் அதேபோன்று நடந்துவிட கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இன்று வாகன சோதனை நடத்தியபோது, ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் …
Read More »மீனவர்களை மீட்கக்கோரி சென்னையில் போஸ்டர் ஓட்டிய 2 பேர் கைது
ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் போஸ்டர் ஓட்டிய புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களது உறவினர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து குழித்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆங்காங்கே பரவலாக மீனவர்களை மீடகக் கோரி, மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து …
Read More »பெற்றோருக்கு முழு அறிவு வேண்டும்!
மாணவர்கள் காப்பீட்டுத்திட்டம் தொடர்பாக பெற்றோர்களும் பூரணமாக அறிந்து வைத்திருக்கவேண்டும். காப்புறுதி பெறுவதில் கடப்பாடுகள் இருக்கின்றன. எனவே பெற்றோர் அதைப்பற்றிய விளக்கத்துடன் இருந்தாலே உரிய நன்மையை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இலவச காப்பீட்டுத்திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வலய கல்விப்பிரதிநிதியும் தமிழ்பாட ஆசிரிய ஆலோசகருமான நிறைமதி தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது: மாணவ சமூகத்தை முன்னேற்று வதன் …
Read More »கழிப்பறை வசதி கொண்ட பிரதேசம் ஆறு ஆண்டுகளாகப் பூட்டிய நிலையில்!
கிளிநொச்சியில் 2010ஆம் ஆண்டில் கரைச்சிப் பிரதேச சபையினால் சந்தை அமைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 5 கழிப்பறை வசதிகள் கொண்ட பிரதேசம் 6 ஆண்டுகளாகப் பூட்டிய நிலையில் காணப்படுகின்றது எனவும் இதனால் கழிப்பறைகளும் பாழடைகின்றன எனவும் சுட்டிக்காட்டப்படு கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் மீளக்குடியமர்ந்த காலத்தில் மக்கள் போக்குவரத்து இடையூறு காரணமாக வாழ்விடங்களுக்கு அண்மையில் தமக்கான அங்காடிகளை அமைக்க முற்பட்டவேளையில் கரைச்சிப் பிரதேச எல்லைப் பரப்புக்குள் ஏ- 9 வீதியின் …
Read More »வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்
வவுனியாவில் இன்று மாலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மேதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
Read More »கூட்டமைப்பில் சமரசம்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடகிழக்கில் தனித்துக் களமிறங்க தீர்மானித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஆசனப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
Read More »தாயின் தலையைத் துண்டித்த 13 வயது தனயன்
சந்தேகத்தின் பேரில் பதின்மூன்று வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வெங்ஸிங் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தை மேற்படி சிறுவன் ஒளிப்பதிவு செய்து அதை சீனாவின் பிரபல சமூக வலைதளம் ஒன்றின் ஊடாக தனது நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்ட காணொளியை, மேற்படி சிறுவனின் நண்பன் ஒருவன் தனது தாயிடம் காட்டியதையடுத்தே சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த ஞாயிறன்று தாயுடன் …
Read More »மகிந்தவைப் பாதுகாப்பதில் ஐ.தே.கவுக்கு லாபம் உண்டு!
மகிந்தவைப் பாதுகாப்பதில் எமக்கு இலாபம் உள்ளது. அவரது பாதுகாப்புக்கு எந்தக் குந்தகம் ஏற்படவும் நாம் அனுமதியளிக்க மாட்டோம். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், கூட்டு எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன வின் கோரிக்கைகுப் பதிலளிக்கையிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்தார். ‘‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவிருக்கும் சூழ்நிலையில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளும் பரப்புரைக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச பங்கெடுப்பார். அவருடைய பாதுகாப்புக்கு …
Read More »புலிக்கொடி அரசியல்!
புலிக் கொடியைத் தூக்கிக் கொண்டு சிங்கள, முஸ்லிம் மக்களிடமிருந்து நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியதையும் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிடும் அறிக்கைகளையும் கோடிகாட்டியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழர்களிடமாக இருந்தால் …
Read More »