நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்தார். ரஜினியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்பு குறித்து ரஜினி பேட்டியளித்ததாவது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன். மேலும், எனது அரசியல் பிரவேசத்தை குறித்து அவரிடம் தெரிவித்து ஆசி பெற்றேன் என …
Read More »தினகரனுக்கு எதிராக நாளை இரவுக்குள் வெடிக்க இருக்கும் டைம்பாம்
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்கு பின்னர் அரசியல் களத்தில் தினகரன் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். தினகரனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் பின்தங்கி தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு மட்டுமே டெப்பாசிட் தொகை கிடைத்தது. திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட்டை இழந்தினர். தேசிய கட்சியான பாஜக நோட்டாவை …
Read More »கருணாநிதியை இன்று சந்திக்கும் ரஜினி
அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து அவர் வாழ்த்து பெறுகிறார். தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தற்போது அவரது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5 நாட்கள் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடிய …
Read More »ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவித்துவிட்டு, பின்னர் அடுத்த நாளே இணையதளம் மற்றும் செயலி மூலம் மன்றத்தின் உறுப்பினர் ஆக்கும் வசதியை கொண்டு வந்தார். இந்த மன்றம் தான் விரைவில் கட்சியாக மாற போகிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களின் சேர்க்கையில் ஒரே நாளில் ஐம்பது லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் பலர் பதிவு செய்து கொண்டே வருவதால் …
Read More »ரஜினியின் முடிவு தவறாகத்தான் முடியும்
சென்னை ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார். அதிமுகவை தோற்கடித்து, திமுகவை டெபாசிட் இழக்க செய்த தினகரனுக்கு இந்த இரு கட்சிகளையும் தமிழக அளவில் அனைத்து தொகுதிகளிலும் எதிர்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. இந்த நிலையில் திடீரென ரஜினி களத்தில் இறங்கியுள்ளதால் அவருக்கு இன்னொரு போட்டியாளர் உருவாகியுள்ளார். தற்போது அவரையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போதிருந்தே ரஜினியை …
Read More »போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை
நீண்டகாலப் போரால் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்த மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தக் கூடிய மாற்றங்கள் இன்னமும் ஏற்படவில்லை – என அமெரிக்க மிசன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அருட்தந்தை ஈனோக் புனிதராஜ் தெரிவித்தார். அராலி தேவாலயத்தில் புதுவருட நள் ளிரவுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து மறையுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் ஆயுதமோதல் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து எதிர்வரும் எட்டாம் திகதியுடன் நான்காவது …
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை பரப்புரைகளில் தவிர்த்து கொள்ளப்பட வேண்டும்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியாதவர்கள் இந்தப் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினது தலைவி யோகராசா கனகரஞ்சனி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களை …
Read More »நீர்வேலியில் சற்றுமுன்னர் விபத்து: இருவர் உயிரிழப்பு!!
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியும் கயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது. விபத்தில் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர். அவர்களில் 5 வயதுச் சிறுமியும் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.
Read More »சுவிடனில் வித்தியாசமான சூரிய கதிர் எதிரொளி: வைரல் வீடியோ!!
சூரியனின் கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். இது மிகவும் சாதரணமான ஒன்றுதான். ஆனாலும், சுவீடன் நாட்டில் காணப்படும் ஒளிவட்டம் வித்தியாசமானதாக இருக்கும். அதாவது, சுவீடனில் நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும். இந்நிலையில், இதற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. நாசா கூறியுள்ளதாவது, ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது …
Read More »கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற மனைவி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய மௌர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் சஞ்சு தேவி …
Read More »