பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சி தொண்டர்களை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்திப்பது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு கருணாநிதி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை …
Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி
வரும் 16-ந் தேதி நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தொடங்கிவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய …
Read More »பெரியபாண்டியன் கொலை வழக்கில் கொள்ளையன் நாதுராம் கைது
தமிழகத்தை அதிர வைத்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், முனிசேகர் என்ற காவலர் சுட்ட போது தவறி பெரியபாண்டியன் மீது பட்டதால் அவர் மரணமடைந்தது தெரிய …
Read More »11 வருடங்கள் செக்ஸ் உறவை தவிர்த்த தம்பதி!
அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திடீரென அதிகப்படியாக உடல் எடை கூடியதால் அவர்கள் செக்ஸ் உறவை 11 வருடங்களாக தவிர்த்து வந்துள்ளனர். தற்போது அவர்களுடைய எடை கிட்டத்தட்ட பாதி குறைந்துவிட்டதால் மீண்டும் செக்ஸ் உறவை தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த லீ மற்றும் ரென ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென இருவரது உடலும் கன்னாபின்னா என்று எடை அதிகரித்து. ஒரு கட்டத்தில் …
Read More »எச்சரிக்கும் டிரம்ப்; அசராத ஈரான்
வல்லரசு நாடுகளுடன் செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுள்ளதாக வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டின. ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இதனால் பொருளாதார தடை படிப்படியாக விலக்கிக்கொள்ள இந்த …
Read More »பாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி
கவிஞர் வைரமுத்து குறித்து ஹெச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்த கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி திருப்பூரில் இஸ்லாமியர்களின் சார்பில் மத்திய பாஜக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீதே கை வைக்கும் போக்கை பாஜக அரசு கடை பிடித்து வருவதாக கூறினார். இத்தனை …
Read More »புதிய கட்சி?
முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதில் இருந்து அதிமுக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனையடுத்து தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அதிமுகவில் குறிப்பிட்ட தரப்பினர் தினகரனுக்கு ஆதரவாகவே உள்ளனர். இரட்டை இலையையும், கட்சியையும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் கைப்பற்றியதை அடுத்து தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் பரவின. ஆனால் தினகரன் அதிமுக இருக்கும் போது …
Read More »விண்வெளியிலிருந்து பார்த்தா தமிழகம் புகை மூட்டமா இருக்காம்!
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலே போகிப்பண்டிகை. இதனால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை முற்றத்தில் வைத்து தீயிட்டு எரிப்பது வழக்கம். தீயிட்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் முதலியவற்றை தீயிட்டு எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் அதை செய்யத்தான் செய்கிறார்கள். நகரங்களில் போகிப்பண்டிகையின் போது காற்று மிகப்பெரிய …
Read More »சட்டப்பேரவைக்கு வருவாரா கருணாநிதி?
மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் சட்டசபைக்கும் சரி அரசியல் நிகழ்வுகளிலும் சரி கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கும் கருணாநிதி செல்லவில்லை. அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சரியாக பிராத்தனை செய்வதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். நேற்று தமிழக சட்டசபையில் …
Read More »கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
போர்க் காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். வவுனியா தபால் நிலையத்துக்கு அருகாமையில் இன்று (13) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனோர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
Read More »