முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று அதிரடியாகத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. கோத்தபாயவைக் கைதுசெய்யவேண்டாம் என்று தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பு அரச தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது-: கோத்தபாய …
Read More »பிப்.8 வடகொரியா ராணுவ அணிவகுப்பு
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது ஆனால், இதற்கு மாறாக தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று தெரிகிறது. மேலும், இரு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைய இருப்பதாக செய்திகள் …
Read More »பிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி
இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று குடியரது தினத்தை முன்னிட்டு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடா்பான செய்திகள் அனைத்தும் நாளிதழ்களிலும் வெளியாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிட்டுள்ளது. இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த செய்தியை பார்த்து பொங்கி எழுந்த நடிகை கஸ்தூரி, அந்த …
Read More »ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்
ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினா சென்னை மெரினா கடற்கரை சாலையில், காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கத்தை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு, வீர தீர செயல்கள் …
Read More »வாங்க பழகலாம்….
50 வருடங்களுக்கு முன் கொரிய தீபகற்பத்தில் நடந்த சண்டைதான் வட கொரியா மற்றும் தென் கொரியாவை பிரித்து வைத்துள்ளது. தற்போது அந்த இடைவெளி அமெரிக்காவால் மேலும் அதிகரித்தது. தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு நாடுகளும் ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அமைதி கிராமம் என்ற இடத்தில் இரண்டு கொரியா நாட்டு முக்கிய அதிகாரிகளும் …
Read More »பாஜகவை வீழ்த்த அவரே போதும்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு பெயர் போனவர். அவரது ஒவ்வொரு கருத்துமே அதிரடியாக இருக்கும். இதனால் அவரை சுற்றி எப்பவுமே பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் பாஜகவை வீழ்த்த அவரே போதும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். பாஜகவின் எச்.ராஜா ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து சர்ச்சைக்கு வித்திட்டார். திருமாவளவனை கடுமையாக விமர்சித்து நானும் ரவுடி தான் …
Read More »விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்தார்
சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் நடந்த மேடையில் எச்.ராஜாவும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா இந்த விவகாரம் …
Read More »பேராறிவாளன் திடீர் விடுதலை ?
அதள பாதாளத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் ஒரே நாளில் உடைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டதாக …
Read More »சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக கைவிட்ட வர்த்தகர்கள் கௌரவிப்பு-(படம்)
பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை கிராமத்திற்கு உற்பட்ட சுமார் 13 வர்த்தக நிலையங்களில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக முன் வந்து கைவிட்டுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இன்று(25) வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக வங்காலை பொது சுகாதார பரிசோதகர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்… பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை பிரதேசத்திற்கு உற்பட்ட …
Read More »வாக்களிப்பு நிலையங்களுக்கு முப்படைப் பாதுகாப்புக்கு ஏற்பாடு
உள்ளூராட்சித் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரையும் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. பொலிஸ் திணைக்களத் தினருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் இடையே கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. வாக்களிப்பு நிலையத்திலி ருந்து 400 மீற்றர்களுக்கு வெளியே முப்படையினர் பயன்படுத்தப்படுவார்கள். அவர்கள் எந்தக் காரணத்துக்காகவும் வாக்களிப்பு நிலையத்தினுள்ளேயோ, வாக்கு எண்ணும் நிலையத்தின் உள்ளேயோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்களிப்பு நிலையத்தி லும், வாக்கு எண்ணும் …
Read More »