தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம். தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்காளியாகவோ, பகையாளியாகவோ இருக்காது எனவும் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னான நிலமைகள் தொடர்பாக நேற்று மாலை யாழ்.நகரில் நடைபெற்ற ரெலோ அமைப்பின் ஊடகவியலானர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே என்.சிறீகாந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார். …
Read More »யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்
யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Read More »சிவராத்திரி நாளில் கடவுள் சிலைகள் உடைப்பு
மன்னாரின் மூன்று இடங்களில் இந்துக்களின் கடவுள் சிலைகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. 3 சிலைகள் திருடப்பட்டுள் ளன. இந்துக்கள் சிவராத்திரி விரதத்தை நேற்றுக் கடைப்பிடித்த நிலையில் இந்த விசமச் செயல்கள் செய்யப்பட்டன. இந்தச் சம்பவங்கள் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட ‘லிங்கேஸ்வரர்’ ஆலயத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் திருடப்பட்டுள்ளன. மன்னார் – தாழ்வுபாடு பிரதன வீதி, கீரி …
Read More »இன்று மாலை ஜனாதிபதியுடன் பலதரப்பு பேச்சு
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று …
Read More »கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் கமல்ஹாசன்….
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அவர் அறிமுகம் செய்ய உள்ளார். இந்நிலையில், தனது அரசியல் கட்சியின் …
Read More »தமிழகத்தில் கோவில்களை சந்தைக் கடைகளாக மாற்ற வேண்டாம்
தமிழகத்தில் கோவில்களை சந்தைக் கடைகளாக மாற்ற வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்தப் பகுதிகளைப் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் தொடர்ந்து கோவில்கள் பல வகைகளில் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக குற்றம்சாட்டிய அவர், பூட்டப்பட்டிருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் விரிசல் இருக்கிறதா?, என உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மீனாட்சி …
Read More »திருமணமான 7 வது நாளில் முன்னாள் காதலனுடன் ஓடிய இளம்பெண்
இளம்பெண் ஒருவர் திருமணமாகி 7 வது நாளிலே, கணவனை விட்டு தனது முன்னாள் காதலனுடன் ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பலதா என்பவருக்கும் ஆனந்த் ஜோதி என்பவருக்கும் கடந்த மாதம் 22ந் தேதி திருமணம் நடைபெற்றது. புஷ்பலதா திருமனத்திற்கு முன்பாகவே வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆனந்த் ஜோதியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி, புஷ்பலதாவும் அவரது …
Read More »ஆசிரியையை ஏமாற்றி உல்லாசம்
தனக்கு திருமணமானதை மறைத்து பள்ளி ஆசிரியருடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றியவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை சேர்ந்த ஷாலினி(30) என்பவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த 2015ம் ஆண்டு பேஸ்புக் மூலம் ராணிப்பேட்டையை சேர்ந்த கோபிநாத்(32) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். வெளிநாட்டில் வேலை செய்வதாக தன்னை காட்டிக் கொண்ட கோபிநாத், ஷாலினியுடன் நட்பாக பழகியுள்ளார். அதன் பின் அது காதலாக மாறியுள்ளது. அதைத் …
Read More »இதுவரை தீர்மானம் இல்லை ?
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேறு எந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானம் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Read More »பிரதமர் பதவியா ? ஜனாதிபதியிடமே கேட்கவேண்டும் – கோத்தா
நான் அமெரிக்க பிரஜையென்பதால் என்னால் எவ்வாறு பிரதமர் பதவியை வகிக்க முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாட்டுக்கு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மீண்டும் தேவையென்பதை நாட்டு மக்கள் தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர். பொய்ப் …
Read More »