மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, ஏதேனும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள், பணம், பொருட்கள் அல்லது வேறேதும் பெறுமதியான பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுக்கும் …
Read More »மோடி பேச்சை கேட்டால் பூஜய்ம் தான் பரிசாக கிடைக்கும்
பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணணந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தது உண்மை என்று ஓபிஎஸ் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: மோடியின் பேச்சை கேட்க வேண்டாம், அதிமுக பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என்று …
Read More »புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்தை ஏற்காதவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது” என்று கூறினார். இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. …
Read More »டிரம்ப்புடன் 9 மாதம் உடலுறவு
டிரம்ப்புடன் 9 மாதம் உடலுறவில் இருந்ததாக ப்ளேபாய் பத்திரிக்கை மாடல் கரேன் மெக்டோகல் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான செய்தி பின்வருமாறு… அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து பல சர்ச்சை செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பிளேபாய் இதழின் முன்னாள் மாடல் அழகி கரேன் மெக்டோகல் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே 2006 ஆம் ஆண்டு உடல் ரீதியான நெருக்கமான …
Read More »போர்க்குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டது?
போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது என பிரிட்டன் வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால், பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அன்டன் கேஸின் போர் இரகசியங்கள் பற்றிய ஆவணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை கொழும்பு ஊடகமொன்றுக்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் …
Read More »இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி!
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகால பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலை காணப்பட்டது. இந்நிலையில் நாட்டில் காணப்பட்ட அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இளம் உறுப்பினர்களுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் …
Read More »நான் சசிகலாவை சமாளித்தேன்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினர் தனக்கு துரோகி பட்டத்தை கொடுத்தனர் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு ஓ.பி.எஸ் பேசியதாவது: நான் ஜெ.விற்கு விசுவாசமாக இருந்தேன். அதனால்தான் அவர் என்னை இரண்டு முறை முதல்வர் பதவியில் அமர வைத்தார். எனக்கு அது போதும். பிரதமர் மோடி கூறியதால்தான் …
Read More »இப்போ குக்கர் சின்னமும்?
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுகவின் கட்சி பெயர் மற்றும் சின்னத்திற்கு தினகரன் மற்றும் ஓபிஎஸ்-எடப்பாடி அணி இரண்டும் போட்டி போட்டது. எதிர்பார்த்தது போல், ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கே அதை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன். இது ஒருபுறம் இருக்க, …
Read More »போயஸ் கார்டனை சிபிஐ கைப்பற்ற வேண்டும்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவ்வப்போது அரசியல் பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று சேலம் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தில் தீபா பேசியதாவது: அண்ணா, எம்.ஜி.ஆரை கண்டெடுத்தார். எம்.ஜி.ஆர், அம்மாவைக் கண்டெடுத்தார். நீங்கள் என்னைக் கண்டெடுத்திருக்கிறீர்கள். நானாக அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் அழைத்ததால் வந்தேன். அம்மாவுக்கென்று பதவி ஆசை இல்லை, தனி வாழ்க்கை இல்லை. அவரின் புகழுக்குக் …
Read More »மோடி கூறித்தான் எல்லாம் செய்தேன்
பிரதமர் மோடி சொல்லித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசியுள்ளார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஜெ.வின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றனர். எனவே, அவரால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் சசிகலா தரப்பு அமர வைத்தது. அதன் பின் சில மாதங்கள் …
Read More »