Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 239)

செய்திகள்

News

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய வேண்டுகோள்

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இவ்வாராம் நிறைவடையவுள்ளன. பாடசாலையின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைகின்றது. தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த அறிவித்தல் விடுத்துள்ளார்.

Read More »

அடுத்தடுத்து அதிரடி காட்டும் கமல்ஹாசன்

அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவர் சந்தித்து பேசியுள்ளார். அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார். அந்நிலையில், அவர் பல முக்கிய நபர்களை சந்தித்து சில ஆலோசனைகளை கேட்டு வருகிறார். தேர்தல் ஆணையத்தில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனை, அவரது இல்லத்திற்கு …

Read More »

கமலைப் பற்றி தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள்

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என நடிகர் விசு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்குகிறார். அதன் பின்பு மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும், முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கன்னு, ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து 21ம் தேதி …

Read More »

கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

சிரியாவில் நடந்த திடீர் கார் வெடிகுண்டு தாக்குதலில் எதிர்பாராத விதமாக 5 பேர் பலியாகினர். குவாமிஷ்லி நகரில் கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். குர்தீஷ் தீவிரவாத அமைப்பினர் இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேஹ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர். …

Read More »

மாதவனை நான்கு நாட்களாக காணவில்லை

தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு மாதவன் வீட்டை விட்டு செல்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு எழுவதாகவும், அதற்கு டிரைவர் ராஜாதான் காரணம் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும், மாதவனை, ராஜா ஒருமையில் திட்டும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில்தான், தீபாவின் வீட்டில் போலி வருமான வரித்துறை …

Read More »

நெடுந்தீவில் ஈபிடிபிக்கு ஆப்பு! கூட்டமைப்பின் நகர்த்தல்

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு சுற்றுப்பேச்சுகள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. 6 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும், சுயேச்சைக் குழு 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஓர் …

Read More »

முன்னாள் போராளிகள் 50 பேருக்கு கிடைத்த வாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட 50 முன்னாள் போராளிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். அவர்களுக்கு 55 வயதிற்குப் பின்னர் ஓய்வூதியக் கொடுப்பனவும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பலாலியில் உள்ள இராணுவப் பண்ணைகளில் தென்னை மரங்களைப் …

Read More »

ஜனாதிபதியை சந்தித்தார் இரா. சம்பந்தன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்ப நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன தோல்வியை தழுவிக்கொண்டன. …

Read More »

இலங்கை அரசியலில் நாளைய தினம் முக்கிய திருப்புமுனை!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் தளம்பலைத் தோற்றுவித்துள்ள நிலையில், நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதால், நாளைய தினம் இரு கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியற்சிக்குமென அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பொருட்டு, கட்சித் தாவல்களும் இடம்பெறலாமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்றில் …

Read More »

இன்னும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன்!! அதிர்ச்சி கொடுத்த ரணில்!!

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தள்ளார். இன்னும் சில நாட்களில் நான் மரணித்துவிடலாம். மரணித்து விடக்கூடும். அப்படி ஏற்பட்டால் பிரதமர் பதிவிக்கு வேறொருவரை நியமிக்க முடியும். பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை என பிரதமர் கூறியதை கேட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு முடிவடைந்ததை …

Read More »