Thursday , October 16 2025
Home / செய்திகள் (page 237)

செய்திகள்

News

தமிழக உரிமையை யாரிடமிருந்து பெறப்போகிறார் தமிழிசை?

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் தமிழக பாஜக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது:- கட்சிகளின் எல்லை கடந்து அத்தனை தலைவர்களும் தமிழகத்தின் நலனுக்காக அக்கறையுடன் கலந்து கொண்ட கூட்டம். தமிழக பாஜக, தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் …

Read More »

கமலின் கட்சிக்கொடி காப்பியடிக்கப்பட்டதா?… எங்கிருந்து தெரியுமா?..

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியின் சின்னத்தின் வடிவம் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், கொடியில் உள்ள ஆறு கைகள், ஆறு தென்மாநிலங்களைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சின்னம் அறிமுகம் செய்த போது அதில் தாமரை, பாம்பு இடம் பெற்றிருந்தது. இதற்கு பலரும் கருத்து கூறினர். எங்கிருந்து காப்பியடித்தது என்று ஆதாரப்பூர்வமாக …

Read More »

ரணிலுக்கு பிடித்த பேராசை! பகிரங்கமாக சொல்லும் மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பேராசை பிடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் நிராகரித்த பிரதமர் இன்னமும் அதிகாரத்தில் இருப்பதென்பது அதிக பேராசையினாலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள விகாரைக்கு சென்றிருந்த மஹிந்த, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில், சமகால எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தனது நிலைப்பாட்டை சபாநாயகரிடம் அறிவிக்க வேண்டும் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! கொலையா தற்கொலையா?

கிளிநொச்சி – புதுமுறிப்புக்குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் நேற்றைய தினம் காணாமல் போனதாக பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளரான 25 வயதான ப.டனுசன் என்ற இளைஞரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கிளிநொச்சியிலிருந்து, கிளிநொச்சி மேற்கு நோக்கி சென்ற போதே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் …

Read More »

ரணில் உற்பட மேலும் சில அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு….!!! மைத்திரியின் அதிரடி

அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பாலும் மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, மங்கள சமரவீரவின் நிதியமைச்சு, கபீர் ஹரிமின் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, மலிக் சமரவிக்ரமவின் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்களிலும் …

Read More »

அவதானமாகப் பேசுங்கள்! டக்ளஸ் தேவானாந்தா வேண்டுகோள்

அரசியல்வாதிகளும், பொறுப்புவாய்ந்த ஊடகங்களும் மிக அவதானமாக செய்திகளையும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தியதலாவ – பண்டாரவளை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய போது, குறித்த சம்பவமானது கண்டிக்கத்தக்கதும், வருந்தத்தக்கதுமாகும். இது …

Read More »

கட்சிக்கும் கட்சி சின்னத்துக்கும் விளக்கம் அளித்த கமல்!

நடிகர் கமல், தனது அரசியல் பிரவேசத்தை இன்று முதல் துவங்கினார். மதுரை பொதுக்கூட்டத்தில், தனது கட்சியையும், கட்சி பெயரையும், கட்சி கொள்கைகளையும் வெளியிட்டுள்ளார். தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டுள்ளார். கட்சி சின்னமாக சிவப்பு, வெள்ளை கைகள் ஒன்றிணைந்து நடுவில் கருப்பு நிறம் சூழ்ந்த நட்சத்திரம் உள்ளதாக கொடியை வடிவமைத்துள்ளார். இந்நிலையில், கமல் தனது கட்சியின் பெயரிற்கும், கட்சியில் சின்னத்திற்கும் விளக்கத்தை அளித்துள்ளார். கமல் கூறியது பின்வருமாறு… …

Read More »

இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல்கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார். அதன் பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அதை தொடர்ந்து கமல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியது பின்வருமாறு… செயல் வீரன் (கெஜ்ரிவால்) கூறினார் இங்கு தமிழகத்தில் பணத்திற்கு பஞ்சமில்லை நல்ல மனதிற்குதான் பஞ்சம் என்று, இந்த கூட்டத்தின் தலைவன் இல்லை நான் தொண்டன். …

Read More »

பதவிகளை இழக்கும் ஐ.தே.கட்சியின் இரண்டு அமைச்சர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரின் அமைச்சுப் பொறுப்புகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் நாளைய அமைச்சரவை மாற்றத்தின் போது இவர்களின் அமைச்சுப் பதவிகளுக்கான பொறுப்பு நீக்கப்படவுள்ளது. அதற்குப் பதிலாக குறித்த அமைச்சர்கள் இருவரும் பொறுப்புகள் அற்ற சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் இருவரும் வகித்த அமைச்சுப் பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அரசியல்வாதிகள் இருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! இளம் உறுப்பினர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இரு பிரதான கட்சிகள் இணைந்து நடத்திச் செல்லப்படும் சமகால அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளது. அதற்கமைய நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றஙம் ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த அமைச்சு பதவி அந்த கட்சிக்குள்ளேயும், சுதந்திர கட்சிக்கு கிடைத்த …

Read More »