Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 231)

செய்திகள்

News

புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சர் அடுத்தவாரம் நியமனம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு அடுத்த வாரம் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் நடந்த கலவரமான நிலைமையை கட்டுப்படுத்துவதில் பிரதமர் தலையீடுகளை மேற்கொண்டதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசியக்கட்சிக்குரிய அமைச்சு பொறுப்பு என்பதால் அடுத்த வாரம் புதிய அமைச்சர் …

Read More »

ரணிலுக்கு எதிராக மைத்திரி பிறப்பித்துள்ள மற்றுமொரு உத்தரவு

maithiri ranil

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இயங்கி வந்த பொருளாதார முகாமைத்துவ குழுவினால், எந்த பயனும் இல்லை என்பதால், அதனை கலைக்க வேண்டும் என ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார். பொருளாதார முகாமைத்துவ குழுவை கலைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள ஜனாதிபதி, குழுவின் மூலம் கடந்த காலம் முழுவதும் எடுத்த முடிவுகள் தோல்வியடைந்துள்ளமை குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி முன்வைத்த இந்த …

Read More »

ஸ்ரீதேவியின் இறப்பு சம்மந்தப்பட்ட சான்றிதழ்களில் உள்ள மர்மம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார் அங்கு இரவு 11.30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளார் என அவருடைய உறவினர் சஞ்சய் செய்திகள் வெளியிட்டார். ஸ்ரீ தேவி அவர்களது உடல் பிரேத சோதனைக்கு பிறகு, அவர் இறந்ததற்கான உண்மை தகவல் வெளியாகியுள்ளது. குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில் …

Read More »

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீ்ரமானத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக தெரிவித்தார். பிரதமரின் ஆட்சியின் குறைப்பாடுகளையும், அவர் ஊழல் வாதிகளுக்கு பாதுகாப்பளித்துள்ளார் என்ற நியாயபூர்வத்தின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் மாறாக அரசியல் அபிலாஷைகளை இலக்காக கொள்ளும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் …

Read More »

என்னை கைதுசெய்ய சதித்திட்டம்

கோத்தபாய ராஜபக்

எவன்கார்ட், ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவைகள், மிக் விமானக் கொள்னவு உள்ளிட்ட விடயங்களில் சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை நிஷரூபணம் செய்ய முடியாது போனமையால் தற்போது லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புப்படுத்தி தன்னை கைதுசெய்ய அரசு சதித்திட்டம் தீட்டுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது, கடந்த காலத்தில் எவன்கார்ட் விவகாரம், ரக்னா லங்கா …

Read More »

ஸ்ரீதேவியும் நானும் அண்ணன்-தங்கை போல்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொள்கை என்பது வேறு, திட்டம் என்பது வேறு; திட்டத்தின் பட்டியலே கொள்கை என நினைக்கிறார்கள். கிராம மேம்பாடு என்பதே எங்கள் கொள்கை; அங்கு என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டம். கிராம மேம்பாட்டை போல் விவசாய மேம்பாடு என்ற கொள்கையின் கீழ் பல திட்டங்களை வைத்துள்ளோம். மக்கள் நலம், தமிழகத்தின் வளம்தான் கொள்கை என …

Read More »

கொத்தணிக் குண்டுகளை தடைசெய்யும் பிரகடனத்தில் கையெழுத்திடுகிறது இலங்கை

கொத்துக்குண்டுகளை (கிளஸ்டர்) தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கான அனுமதியைக் கோரும் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையிடம் முன்வைத்திருந்தார். இதற்கமைய, கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில், கையெழுத்திட்ட 102 நாடுகளுடன் சிறிலங்காவும் இணைந்து கொள்ளவுள்ளது. அதேவேளை, போரின் போது சிறிலங்கா படையினர் ஒருபோதும், கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவர்கள் அதனைப் பயன்படுத்தமாட்டார்கள் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read More »

சிங்கப்பூருக்கு பறந்தார் பிரதமர்

Ranil

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே பிரதமர் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதில் பிராந்தியத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கு முன்னதாக, இலங்கையில் முதலீடு என்ற பெயரிலான மாநாடுகள், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன.

Read More »

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமனம்

காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு உறுப்பினர்களின் நியமனங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் அளித்துள்ளார். ஜனாதிபதியின் சட்டவாளர் சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராகச் செயற்படுவார் என்றும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்தின் ஏனைய உறுப்பினர்களாக, ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், கலாநிதி சிறியானி …

Read More »

ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்

உடல் நலக்குறைவால் மரணமடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர்(82) கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார். அந்நிலையில் நேற்று காலை ஜெயேந்திரருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் …

Read More »