தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள 682ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறுவதற்கு மாற்று காணிகள் வேண்டும் என்றும், அவற்றை எழுத்தால் எழுதி வழங்கவேண்டும் என்றும் இராணுவத்தளபதி ஒருவர் கோரிக்கை …
Read More »யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவை, அம்பாறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தை தவிர அனைத்து பிரதேசங்களிலும் மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில பிரதேசங்களில் 100 …
Read More »சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் அவசர சிங்கப்பூர் விஜயம்?
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அவசர சிங்கப்பூர் விஜயம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருக்கும் இடத்தை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கேட்டு அறிந்து கொள்ளலாம் என குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகலகந்தே சுதத்த தேரர் கூறியுள்ளார். அத்துடன், பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படும் விதம் …
Read More »இரண்டாய் பிளவுபட்ட தமிழ் மக்கள் பேரவை: வலுக்கும் உள்முரண்பாடுகள்!
தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் பேரவை உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஏனைய பேரவை உறுப்பினர்களுக்கும் இடையே இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டதாக உள்மட்ட தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை, பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கூட்டம் முடிந்தும் இறுகிய முகங்களுடன் வெளியேறியதை அவதானிக்க முடிந்தது. பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக்கள் எதனையும் வெளியிட மறுத்த அவர்கள், வேகமாக …
Read More »சென்னையில் கமல்ஹாசனின் முதல் பொதுக்கூட்டம்
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதனையடுத்து ஆன்லைன் மூலம் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் கட்சியில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறும் என்று கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். ஆனால் …
Read More »இது திட்டமிட்ட என்கவுண்டர்
நேற்று மதுரையில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இந்த என்கவுண்டர் ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம் என முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். முத்து இருளாண்டியின் மற்றும் சகுனி கார்த்திக் இருவரையும் போலீசார் ஆஜராக கூறியதாகவும், அதன்பேரில் இருவரையும் அழைத்த வந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு போலீசார் கொன்றுவிட்டதாகவும் சகோதரி சித்திரைச்செல்வி அந்த …
Read More »உதவி பொருட்களுக்கு பதில் உடலுறவு
சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சிரியாவில் பாதிக்கபட்டவர்களுக்காக ஐநா உதவிக்குழு ஏராளமான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அந்த உதவி பொருட்களை கொண்டு சென்ற குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடலுறவு …
Read More »ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் சிறிலங்கா வருகிறார்
ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 4ஆம் நாள் தொடக்கம்இ 7ஆம் நாள் வரை இவர் சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் இந்தப் பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் …
Read More »இரண்டு வாரத்துக்குள் ஐ.தே.மு. அரசின் அதிரடியான மாற்றங்கள்
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசில் அடுத்த இரண்டுவாரங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. மூன்று பிரதாக அறிக்கைகள் மற்றும் முழு நாட்டிலும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள யோசனைகளுக்கு அமையாக இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஐ.தே.கவின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தில் அரசு துரிதமாக மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்திட்டங்கள் குறித்த அறிக்கை இன்று …
Read More »காணாமல்போனோர் பணியகம் : நல்லிணக்கத்திற்கு முதல்படி அமெரிக்கா தூதுவர்
சுயாதீனமான மற்றும் வலுவான காணாமல்போனோர் தொடர்பான பணியகம் நிறுவப்படுவது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கும் தமது அன்புக்குரியவர்களை தேடுபவர்களுக்கு ஒரு முன்னோக்கிய படியாகும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள அவர், சுயாதீனமான மற்றும் வலுவான காணாமல்போனோர் தொடர்பான பணியகம் நிறுவப்படுவது இலங்கை மக்களின் சமாதானம்இ நல்லிணக்கம்இ பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை என்பனவற்றுக்கும்இ விசேடமாக …
Read More »