ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கின்ற ஒரு முயற்சியாக சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் தனது அர்ப்பணிப்பை ஜப்பான் உறுதிப்படுத்தவுள்ளது. ஜப்பானில் இருந்து வெளியாகும் பத்திரிகையொன்று தகவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 12ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் வரை ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிடோ …
Read More »நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்
நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில்இ இரண்டு குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம் மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன. நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர். அவுஸ்ரேலிய …
Read More »யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல்!
யாழ். கொக்குவில் – பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த வீட்டின் கதவையும் கோடரியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் கூறியுள்ளனர்.
Read More »தமிழக எம்பிக்கள் ராஜினாமாவா?
விவகாரம் குறித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை செய்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது குறித்த திட்டம் ஒன்றை கூறினார். மு.க.ஸ்டாலினின் இந்த திட்டத்திற்கு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். திமுகவுக்கு மக்களவையில் ஒரு எம்பி கூட கிடையாது. மாநிலங்களவையில் நான்கு எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். மக்களவை …
Read More »ஜெயலலிதா நினைவிடத்தில் நடந்த தற்கொலை
மறைந்த முன்னாள் முதல்வரின் நினைவிடத்தில் மதுரையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மெரினா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் நிலையில் இன்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அருள் என்ற போலீஸ்காரர் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டு …
Read More »பரிதவிக்கும் 4 லட்சம் மக்கள்….
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்துள்ளனர். சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடத்திய தாக்குதலில் மக்கள் பலர் உயிரழிந்தனர். இதுவரை 800-க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர் அதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட உள்ள நிலையில், இதற்கு முன்னர் நடத்திய போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. …
Read More »சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் திடீர் அனுமதி
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவொரு வழக்கமான சோதனை தான் என்றும், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சென்னை அப்பல்லோவில் பணிபுரிவதால் அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் …
Read More »கேரள முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று அதிகாலை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை கேரள முதல்வருக்கு வருடாந்திர மருத்துவ சோதனை செய்ததாக அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் மருத்துவ சோதனைக்கு பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜய், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது …
Read More »சரத் பொன்சேகாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்?
சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் நீதித்துறை சார்ந்த அமைச்சு பதவி வழங்கப்படும் போது தமிழர்களின் நிலை கேள்விக்குரியாகிவிடும் என்ற அச்சம் தோன்றியுள்ளதால் இதனை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ள …
Read More »தமிழர்களுக்கு எதிராக இனவாத செயற்பாட்டில் மஹிந்த!
காணாமல் போனோர் பணியகத்திற்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். காணாமல் போனார் பணியகத்திற்காக ஆணையாளர் நியமிக்கப்பட்டமையின் ஊடாக அரசாங்கம் காட்டிகொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் காட்டி கொடுப்பு வேலைத்திட்டங்கள் மீண்டும் இதன் ஊடாக தெளிவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தின் …
Read More »