Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 228)

செய்திகள்

News

இது சிங்கள பௌத்த நாடு முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் : ஞானசாரர்

இது சிங்கள பௌத்த நாடு என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்றால்போல் வாழவும் வேண்டும். அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் திரும்ப கொலை செய்வோம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பு இன்று நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிங்களம்,முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் சமாதானமாக இருக்க …

Read More »

நாடு முழுவது 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் பிரகடனம் : ஜனாதிபதி உத்தரவு

கண்டி, திகன – தெல்தெனி பிரதேசத்தில் ஏற்படடுள்ள பதற்றமான நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 10 நாட்களுக்கு நாடு முழுவது அவசகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவுப்பிறப்பித்துள்ளார்.

Read More »

கண்டியில் மீண்டும் ஊரடங்கு – இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் தொடர்கிறது பதற்றம்

கண்டி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட போதிலும், தெல்தெனிய, பல்லேகல காவல்துறை பிரிவுகளில் மீண்டும் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, நேற்று பிற்பகல் 3 மணிக்கு கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. எனினும், நேற்றிரவும் சில இடங்களில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் வாணிப நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், …

Read More »

கண்டியில் வன்முறை களத்தில் இராணுவம்

கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று வன்முறைகள் வெடித்தன. சிறப்பு அதிரடிப்படையினரும்இ காவல்துறையினரும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தோல்வியடைந்தனர். இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் இராணுவத்தின் உதவி கோரப்பட்டது. காவல்துறையினால் உதவி கோரப்பட்டதை அடுத்து உடனடியாக இராணுவத்தினரை அங்கு அனுப்பி வைத்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் …

Read More »

தினகரனை குறி வைக்கும் கமல்ஹாசன்

பொதுச் செயலாளராக டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஊழலை அம்பலப்படுத்துமாறு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் மய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்நிலையில்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனால், பொதுமக்கள் மத்தியில் அவரின் இமேஜ் உயர்ந்தது. ஆனால், ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, தினகரன் தரப்பு …

Read More »

பிரான்சில் இந்த மாதம் முதல் வந்துள்ள மாற்றங்கள்

பிரான்சில் மார்ச் 1ம் திகதி முதல் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. சிகரெட் விலை சிகரெட் பாக்கெட் ஒன்றின் விலை சராசரியாக ஒரு யூரோ வரை அதிகரித்துள்ளது. அதாவது புகை பிடிப்பவர்கள் இனி ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு 8 யூரோக்கள் செலுத்த வேண்டும். பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macronஇன் பதவிக் காலம் முடிவதற்குள் இது 10 யூரோக்கள் வரை உயரலாம். சமையல் எரிவாயுவின் விலை சமையல் எரிவாயுவின் விலை …

Read More »

ரணிலின் இடத்திற்கு பொன்சேகாவை நியமிப்பதில் ஐ.தே.க மீண்டும் ஆர்வம்

சட்டம் ஒழுங்கு அமைச்சராக உள்ள ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்கு பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகாவை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆர்வம் காட்டிவருவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி முன்னதாகவே யோசனையை முன்வைத்திருந்தது. எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார். ஆனால்இ தற்போது மீண்டும் சரத்பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி …

Read More »

ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – ஹோட்டலில் நடந்தது என்ன?

ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி நீரில் மூழ்கி மரணமடைந்தார். இந்நிலையில், துபாயில் என்ன நடந்தது என அவரின் கணவர் போனி கபூர் கூறிய விஷயங்களை திரைத்துறை வர்த்தக விமர்சகர் கோமல் நாஹ்தா தனது இணையதள ப்ளாக்கில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: துபாயில் தனது உறவினரின் திருமணம் முடிந்த பின், தனது மகள் ஜான்வி விரும்பிய சில …

Read More »

அனந்தி சசிதரன் அம்பலப்படுத்தி உண்மை : டக்ளஸ் வரவேற்பு

தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியதாக வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தத. இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு …

Read More »

இரண்டாம் கட்ட அமைச்சரவை மாற்றம் : சு.கவுக்குள் இழுபறி

அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சியின் உள்ளகத் தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்த தோல்வியின் பின்னர் கொழும்பு அரசியலில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அரசியல் பதற்ற நிலையைத் தனிக்க அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதாக தேசிய அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது. எனினும் முதலாம் கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. …

Read More »