Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 221)

செய்திகள்

News

அமுலுக்கு வருகிறது புதிய வரிமுறை

புதிய வரி முறையின் மூலம் நாட்டின் வியாபார சூழலை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் குறித்து நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற பொது விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகாரம் பெற்ற புதிய உள்நாட்டு வருவாய் சட்டமானது, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் …

Read More »

இலங்கை குறித்த அறிக்கை ஐ.நா.-வில் நிறைவேற்றம்!

இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்று (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி முதல், 17ஆம் திகதிவரை, ஜெனீவாவில் நடைபெற்ற பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், இலங்கை தொடர்பாக …

Read More »

தேசிய கொடி போர்த்தும் அளவுக்கு என்ன செய்தார் ஸ்ரீதேவி? ராஜ்தாக்கரே

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் துபாயில் எதிர்பாராத வகையில் குளியல் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணத்தால் திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அவருடைய இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர் மேலும் மகாராஷ்டிர அரசு, அவரது உடலுக்கு மூவர்ண தேசிய கொடியை போர்த்தி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவியது. …

Read More »

சசிகலாவுக்கு பரோல்

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நடராஜனின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, சசிகலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு சிறை நிர்வாகம். இதனையடுத்து இன்னும் சில …

Read More »

நடராஜன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சசிகலாவின் கணவரும் பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான நடராஜன் இன்று அதிகாலை உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருமாவளவன்: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழவிடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: …

Read More »

நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பிரபல பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகரும் சசிகலா கணவருமான நடராஜன் இன்று காலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனார். இந்த வகையில் சற்றுமுன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், பொன்முடி , எ.வ.வேலு உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் உடனிருந்தனர். நடராஜன் மறைவு குறித்து ஸ்டாலின் கூறியபோது, ‘நடராஜனின் மறைவு …

Read More »

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி யாழ். விஜயம்

யாழ். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி இன்று திறந்து வைத்துள்ளார். யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார். பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3 கோடி ரூபா நிதி செலவில் இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த …

Read More »

சொத்துக்காக பெற்ற தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகன்

புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை அவரது மகனே வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ராணி(54). இவரது மகன் ஆனந்த்(30). சொத்து தொடர்பாக ராணிக்கும், ஆனந்துக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இன்று காலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது தாய் என்றும் பாராமல் ராணியின் தலையை துண்டித்து காவல் …

Read More »

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ராஜ்நாத் சிங் எங்கே?

இந்திய ராணுவம் இல்லாத பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இந்தியவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இருவருக்கு மோசமாக காயம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் அருகே இருக்கும் பூன்ச் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் 5 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். காஷ்மீர் தொடர்பான பிரச்சைனை இந்தியா …

Read More »

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் – தமிழிசை

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக கட்சியினர் பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உரிமையை மீட்க பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். மத்திய …

Read More »