Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 212)

செய்திகள்

News

அடித்து நொறுக்கப்பட்ட கர்நாடக பேருந்தின் கண்ணாடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று கூறி வரும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்குள் வரும் கர்நாடக மாநில பேருந்துகளும், கர்நாடகத்திற்குள் செல்லும் தமிழக பேருந்துகளும் ஒருவித அச்சத்துடனே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் செல்லும் கர்நாடக …

Read More »

தொடரும் சிரியா தாக்குதல்

சிரிய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர். …

Read More »

காவிரி விவகாரத்துல திமுகவும் அதிமுகவும் ஓவரா நடிக்குறாங்க

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விவகாரத்துல திமுக வும், அதிமுகவும் அப்பட்டமாக நடிக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த அதிரடியாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் …

Read More »

நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அருண்ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும்,இதுதொடர்பான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது

Read More »

கொரிய அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை

தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் சுங் ஹீயின் மகள் பார்க் கியூன் ஹே அதிபராகி ஊழலில் ஈடுப்பட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார். இவரது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென்கொரிய நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் சுங் ஹீ கடந்த 1963 முதல் 1979 வரை ஆட்சி செலுத்தினார். கடந்த 1978 ஆம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு இவரது மகள் பார்க் …

Read More »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி செலுத்த மாட்டோம்? இது புது டிவிஸ்ட்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தாமல், மத்திய அரசிடம் எதிர்ப்பை புதிய விதத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இது குறித்து அவர் …

Read More »

ஐ.பி.எல் போட்டியை புறக்கணியுங்கள்

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்குமாறு தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம் பூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், …

Read More »

தன்னந்தனியாக பேருந்தை நிறுத்திய திமுக பெண் தொண்டருக்கு ஸ்டாலின் அழைப்பு

நேற்று திமுக உள்பட 15 எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் மற்றும் சாலை மறியல் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் முழக்கமிட்ட கோஷங்களால் தமிழக காவல்துறை திணறியது இந்த நிலையில் நேற்று வேலூர் – திருப்பத்தூர் சாலையில் அரசு பேருந்து ஒன்றை தன்னந்தனியாக திமுக கொடியை கையில் ஏந்திய ஒரு பெண் வழிமறித்து தனது எதிர்ப்பை காட்டினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தனியொரு …

Read More »

அமெரிக்காவில் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்படும் கருப்பு இனத்தவர்கள்

அமெரிக்காவில் இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து கருப்பு இனத்தவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியா மாகாணத்தில் கருப்பு இனத்தவர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்த போலீசார் அவரை சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். பிறகு அவர் கையில் இருந்தது துப்பாக்கி இல்லை ஐபோன் என தெரிந்தது. இதனால் போலீஸாரைக் கண்டித்து கருப்பு …

Read More »

நெற்றியில் சந்தனம் வைத்த மாணவிகளை துன்புறுத்தியதாக பள்ளி நிர்வாகம்

தமிழகத்தில் இயங்கி வரும் பல தனியார் பள்ளிகள், மத நோக்கத்திலும், மதங்களை பரப்புவதிலும் ஈடுபட்டு வருவதாகவும், பிற மதங்களை சார்ந்த மாணவ, மாணவிகளை துன்புறுத்தி வருவதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் ஆரணியை அடுத்த தேவிகாபுரம் என்ற பகுதியில் இயங்கி வரும் குளினி மெட்ரிக் கிருஸ்துவ பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் இன்று காலை பள்ளிக்கு வரும்போது நெற்றியில் சந்தனம் வைத்து கொண்டு வந்தனர். அந்த …

Read More »