சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகினறனர். சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்கபடும் என்று ஆவேசமாக கூறியிருந்தார். ஆனால், ரசாயன் தாக்குதலை …
Read More »சீனாவில் பெற்றோர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை
கார் விபத்து ஒன்றில் பெற்றோர் இறந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் குழந்தை வாடகைத் தாய் மூலம் பிறந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு உயிரிழந்த அந்தத் தம்பதிகள் செயற்கை கருவூட்டல் மூலம் உண்டாக்கிய தங்கள் கருக்கள் பலவற்றையும் உறைநிலையில் சேமித்து வைத்திருந்தனர். அவர்கள் விபத்தில் இறந்தபின் அந்தத் தம்பதிகளின் பெற்றோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அந்தக் கருக்களை பயன்படுத்த அனுமதி பெற்றனர். லாவோஸ் நாட்டைச் …
Read More »வைகோ உருவ பொம்மையை எரித்து பா.ஜனதா போராட்டம்
பா.ஜனதா இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தலைமை தாங்கினார். மாநில இளைஞ ரணி பொதுச் செயலாளர் வசந்தராஜன், மாவட்ட தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டு வைகோவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். உடனே அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வசந்தராஜன் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டம் …
Read More »பிரதமர் மோடி வாக்குறுதியை மீறிவிட்டார் – சந்திரபாபுநாயுடு தாக்கு
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். வாக்குறுதியை காப்பாற்றாத பிரதமர் மோடிக்கு ஆந்திர மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில் மீண்டும் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார். …
Read More »சென்னையில் வைகோ – திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து …
Read More »பிரதமர் மோடி வருகையை எதிர்த்து தீக்குளிப்பு
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தர்மலிங்கம் என்பவர் வீட்டு சுவரில் மோடி வருகையை கண்டிப்பதாக எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது உயிரிழந்து விட்டார்.
Read More »இந்த நிலை மாற வழி செய்யுங்கள் – காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகிறது. விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரலங்கள் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்துள்ளார். பல்வேறு தரப்பினரும் மேதடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி …
Read More »காவிரி பிரச்சினை நீடிக்க அரசியல் கட்சிகள் விருப்பம் – நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். பா.ஜனதா நாட்டை ஆளக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சினையை தீர்க்காமல் அதை அரசியல் கட்சிகள் உயிரோடு வைத்திருக்கவே விரும்புகின்றன. நைல் …
Read More »இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 27 பேர் காரைக்கால் வந்தனர்
புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், என மொத்தம் 27 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை எல்லையில் நுழைந்து மீன் பிடித்ததாக கூறி 27 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், 27 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுதலைச் செய்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் …
Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டுகள் சிறை
கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள மபூசா பகுதியை சேர்ந்தவர் சிட்னி லிமோஸ். இவரது மனைவி வாலனி. இவர்களுடன் ரியான் டிசோசா என்ற இந்தியரும் சேர்ந்து துபாயில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். தங்களது நிதி நிறுவனத்தில் அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை முதலீடு செய்து வந்தால் 120 சதவீதம் லாபம் தருகிறோம் எனக்கூறி பலரை சேர்த்தனர். அவர்களது கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பலர் அந்த நிறுவனத்தில் பல …
Read More »