Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 206)

செய்திகள்

News

ஊடகம், இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருதுகள் அறிவிப்பு

ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் பெயரில் 1912-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசையமைப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகிறது. மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்க ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்கெர், பிரெஸ் டெமோக்ரட், அரிசோனா ரிபப்ளிக், யு.எஸ்.ஏ டுடே, தி சின்சின்னாட்டி என்கொயர், …

Read More »

பேராசிரியை நிர்மலா கைது

தனியார் கல்லூரியின் கணித பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யபட்டார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். …

Read More »

கதவில்லாத கோவிலில் சிறுமியை எப்படி?

காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். 7 நாட்களில் ஒரு கோவிலில் அந்த சிறுமியை அடைத்து …

Read More »

கங்கை அமரனிடம் அடித்து பிடுங்கிய பங்களாவை ஒப்படை: தினகரனுக்கு எச்.ராஜா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு பூஜையில் கலந்துக்கொண்டார் பாஜக தலைவர் எச்.ராஜா. இவர் எப்போதும் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசக்கூடியவர். தற்போதும் அதே மாதிரிதான் பேசியுள்ளார். எச்.ராஜா கூறியது பின்வருமாறு, காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும். ஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை இதனால் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் ஸ்கீம் …

Read More »

சிரியாவின் கோர நிலை

சிரியாவில் அரசு தரப்பிற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான போர் காரணமாக மக்கள் காரணமின்றி தங்களது உயிரைவிட்டு வருகின்றனர். இதில் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் அடக்கம். சமீபத்தில் சிரியாவில் நடத்தப்பட்ட ராசாயன தாக்குதலால் பல குழந்தைகள் முச்சிதிணறி உயிர் இழந்தனர். இதனால், கோபம் அடைந்த டிரம்ப், சிரியா மற்றும் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் …

Read More »

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள். 135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மனஅழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமாக இருந்தது. போதைப் பொருளுக்கு ஒருவர் எப்படி படிப்படியாக அடிமையாவாரோ அதே போன்று ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி அதை அதிகம் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. முதலில் மூளையில் உள்ள நரம்பு …

Read More »

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். …

Read More »

அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு – 4 பேர் காயம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 …

Read More »

இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் …

Read More »

சிரியா மீதான தாக்குதல் தொடரும்

டொனால்ட் ட்ரம்ப்

சிரியா ரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்து உள்ளார். சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். …

Read More »