கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக வீடுகள் கூட இன்றி மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாக இத்தாவில் கோயில்காடு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாவது: கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமமே இத்தாவில் கிராமம். குறித்த கிராமத்தில் உள்ள ஒரு பகுதியே கோயில்காடு பகுதி. குறித்த பகுதியில் பிரதேச செயலகத்தால் அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு காணி இல்லாத மக்கள் …
Read More »ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு கடந்த வாரம் …
Read More »முல்லைத்தீவில் மொழிப் பிரச்சினையால் நோயாளர் அசௌகரியம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கடமையாற்றுவதால், நோயாளர்கள் மொழிப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றார்கள். இதே மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் பலர் இங்கு கடமையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வடமாகாண சுகாதார அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை மருத்துவமனையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குண சீலன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அமைச்சருக்கு இந்த …
Read More »மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் : எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோ
சமீபத்தில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பத்திரிக்கையாளர் சங்கங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும், அவரது வீட்டின் மீது கற்களை வீசியும் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், யாரையும் காயப்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என அவர் பேசியுள்ளார்.
Read More »காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலியப் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். 1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று …
Read More »ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி
ஏமன் நாட்டின் டைஸ் பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான …
Read More »ஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் இந்தியாவுக்கு புறப்பட்டார். காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நேற்று தொடங்கியது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் 91 …
Read More »ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைபர் சைகோக்கள் – ஜெயக்குமார் பேட்டி
பாஜக தேசிய செயலாளர் மற்றும் எஸ்.வி.சேகர் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும், பெண் செய்தியார் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரமாகியது. அந்த செய்தியாளர் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட, ஆளுநர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. அந்த நிலையில், ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக …
Read More »ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி
இலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் உள்ள ஹொரானா நகரில் இருக்கும் ரப்பர் தொழற்சாலையில் பணியாளர் ஒருவர் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு அவரை தாக்கியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை அந்த தொட்டியில் இருந்து மீட்க உள்ளே …
Read More »சிறுமி பலாத்காரம் : தலையில் கல்லை போட்டு கொலை
காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இது போன்ற மேலும் ஒரு சம்பவம் சத்தீஸ்கரில் நடைபெற்றுள்ளது. கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்றிருந்தார். அப்போது திருமணத்திற்கு …
Read More »