மாநிலங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடக்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரசியல் கொள்கைகள், கருத்துகள் பேசக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சி அல்லது இயக்கங்களின் கொள்கைகளை தங்களின் உரைகளில் கலந்து பேசுவதாக தெரியவருவதாகவும், இது போன்ற நிகழ்வுகள் கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு இடையூறாக அமையும் …
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் ஓரணியில் திரளுங்கள்!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அனைத்து உறவுகளும், அமைப்புக்களும் , அரசியல்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது-, இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் இறையாண்மை உள்ள ஆட்சி அதிகாரங்களுக்கு உரித்துடையவர்கள். இந்தச் செல்நெறிப்போக்கு கடந்த காலங்களில் இடர்பாடுகளை எதிர்கொண்ட வேளைகளில்தான் தமிழர்கள் தமது தார்மீக அடிப்படையிலான …
Read More »நீட் தேர்வு எழுதவிருந்த நெல்லை மாணவர் திடீர் தற்கொலை
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்னும் நான்கு நாட்களில் நீட் தேர்வு எழுதவுள்ள நெல்லை மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவரின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் அவருடைய குடும்பம் …
Read More »ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடி
மறைமுக வரிகளுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மாதந்தோறும் அதன் வசூல் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி வசூல் ஆகியுள்ளது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு வரி வசூலானது இதுவே முதல்முறை ஆகும். கடந்த மார்ச் …
Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 55 மாதங்களில் இல்லாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்து விட்டது. ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான், பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.43, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.56 என்று உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு …
Read More »மத்திய மந்திரி பியூஷ் கோயல் மீது ஊழல் குற்றச்சாட்டு – ராஜினாமா செய்ய ராகுல் காந்தி வற்புறுத்தல்
ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், முன்பு மத்திய மின்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, அவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:- மத்திய மின்துறை மந்திரியாக இருந்தபோது, பியூஷ் கோயல் தனது ‘பிளாஷ்நெட் இன்போ சொல்யூஷன்ஸ்’ நிறுவன பங்குகளை மின்துறையில் ஈடுபட்டுள்ள ‘பிரமல் குழுமத்துக்கு’ விற்றுள்ளார். பங்குகளின் முகமதிப்பை விட ஆயிரம் மடங்கு விலை வைத்து அவர் …
Read More »விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அவசர கால கதவை திறந்த பயணி கைது
சீனாவின் சென்ஜென் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் (25) என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வழியில் வெளியே செல்ல முயற்சி செய்து இருக்கிறார். இதை பார்த்த விமான பணிப்பெண்கள் உடனடியாக, விமான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். பின் விமானிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் மூன்றுக்கும் …
Read More »அர்மேனியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார் எதிர்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான்
ஆசியா-ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள அர்மேனியா நாட்டில் சுமார் 30 லட்சம் வாழ்ந்து வருகின்றனர். முன்னர் ரஷியா தலைமையிலான சோவியத் யூனியனில் அர்மேனியா நாடும் ஒரு அங்கமாக இருந்தபோது ரஷிய ராணுவத்தில் பணியாற்றியவர் செர்ஸ் சர்கிசியான். முன்னாள் அதிபர் அர்மேன் காலத்தில் இருமுறை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013-ம் தேர்தலிலும் போட்டியிட்டு அதிபராக வெற்றிபெற்ற இவரது …
Read More »நைஜீரியா போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். இதனிடையே, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள ஆடமாவா மாநிலத்திற்கு உட்பட்ட …
Read More »பாலியல் வழக்கு விசாரணை: வாடிகன் மூத்த அதிகாரி கோர்ட்டில் ஆஜர்
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வாடிகனின் 3-வது உயர்ந்த அதிகார மையம், கார்டினல் பெல் (வயது 76) ஆவார். இவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் மூத்த உதவியாளர்களில் ஒருவர். இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றியபோது, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த குற்றச்சாட்டுகளை கார்டினல் பெல் தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர் சட்டப்படி சந்திப்பதற்கு வசதியாக விடுமுறையில் செல்வதற்கு கடந்த ஆண்டு போப் ஆண்டவர் …
Read More »