Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 194)

செய்திகள்

News

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம் – மன்சூர் அலிகான் பங்கேற்பு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்றுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் 84வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். # …

Read More »

தமிழக மாணவர்களுக்கு உதவத் தயார் – கேரள முதல்வர்

நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர்களுக்கு கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக மாணவர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்கள் …

Read More »

ஜெயலலிதா நினைவிடம் – மே 7-ல் அடிக்கல் நாட்டு விழா!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல், …

Read More »

நல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா

வட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.  வெகு விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருக்கிறார். கிம் – மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. …

Read More »

மூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக 5 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரும் 6-ம் தேதி கவுதமாலா சென்று அங்கு அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா ஆகியோரை சந்திக்கிறார். 7-ம் தேதி பனாமா செல்கிறார். அங்கு பனாமா அந்நாட்டு அதிபர் ஜுவான் …

Read More »

24 மணி நேரத்தில்… 250 நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு

அமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது எரிமலை வெடித்து அவசர அவசரமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென எரிமலை வெடித்து சாலை வரை எரிமலை குழம்பு பீறிடத்துவங்கியுள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், எந்நேரமும் எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், …

Read More »

இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் : நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்

குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி கற்பழித்த வாலிபரும், அவரின் நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவடம் அரூர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண்ணிற்கும், சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக்(24) என்கிற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, அவர்கள் இருவரும் சேலத்தின் பல இடங்களுக்கும் சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சேலத்திற்கு …

Read More »

தமிழகம் வந்தார் ஜனாதிபதி: சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து ராணுவ …

Read More »

ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் …

Read More »

ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்

அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி கிராம தன்னாட்சி திட்டத்தின்படி, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களுக்கு சென்றடைகிறதா? என ஆய்வு செய்யும்படி மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம், திக்கணங்கோடுபுதூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்தார். நாகர்கோவிலை அடுத்த மேலகருப்பு கோட்டை கிராமத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சென்று ஆய்வு நடத்தினார். வீதிகள் தோறும் சென்று மக்களை சந்தித்து …

Read More »