Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 193)

செய்திகள்

News

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ஆதாரத்துடன் கூறுகிறார் நெடுமாறன்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது; பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன? வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் …

Read More »

சிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்

போரால் சிதைந்துள்ள சிரியாவில் தங்களின் கடைசியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஸ்டன் பகுதியை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர் சிரிய கிளர்ச்சியாளர்கள். மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான ஒரு பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தங்களின் குடும்பத்தோடு பேருந்து வழியாக வெளியேறி வருகின்றனர். சிரியா அரசு மற்றும் அதன் ரஷ்ய கூட்டணியுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கு சிரியாவில் எதிராளியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்திற்கு இப்போராளிகள் பாதுகாப்பாக …

Read More »

ஜெ.வின் நினைவு மண்டபத்தில் இரட்டை இலை?

மக்கள் வரிப்பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு மண்டபத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று இந்த நினைவிடம் …

Read More »

நீட் தேர்வு! மாணவியின் தந்தை நெஞ்சு வலியால் திடீர் மரணம்

நீட் தேர்வுக்காக மகளுடன் புதுவை வந்த சீனிவாசன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். நீட் தேர்வுக்காக தமிழக மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தது நாம் அனைவரும் அறிந்ததே. பல்வேறு கட்டுப்பாடுகள், மொழி தெரியாத மாநிலங்களில் தேர்வு மையம், தங்கும் வசதி, போக்குவரத்து செலவு என பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும். எர்ணாகுளத்தில் மகனுக்காக காத்திருந்த தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்த சோகம் …

Read More »

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை

சட்டவிரோத குடியேறிகள் விடயத்தில் அவுஸ்திரேலியா கடுமையாக நடந்து கொள்ளும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லவிருந்த 131 இலங்கையர்கள், மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைப்பகுதிக்கு இன்னும் ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவுஸ்திரேலியா தமது எல்லைப்பகுதி கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியுள்ளதையும் குடிவரவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Read More »

பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

நாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. இந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 …

Read More »

தமிழக மாணவர்களுக்கு கேரளாவில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியது ஏன்?

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் மிகப்பெரும் குளறுபடி நடந்தது. கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற வட மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மாணவர்களுக்கு மாநில அரசு, தொண்டு …

Read More »

கம்மலை அடகுவைத்து நீட் தேர்வுக்கு கேரளா செல்லும் ஏழை மாணவி..!

நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்துவிட்டு எர்ணாகுளம் செல்கிறார், அரியலூர் மாணவி ஹேமா. பேருந்து நிலையத்திற்கே தனியாகச் செல்லாத நான், எப்படி வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வெழுதப்போகிறேன் என்று தெரியவில்லை எனப் புலம்புகிறார். நீட் தேர்வுக்கான மையங்கள் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் செய்யப்பட்டது. இதில், நீட் தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட மையங்களில்தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வெளிமாநிலத்தில் நீட் தேர்வெழுத மாணவர்கள் …

Read More »

மகிழ்ச்சியடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை கொண்டுள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கட்டியெழுப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் பக்கசார்பற்ற சூழல் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஜனாதிபதியின் பணிகளுக்கான அதிகாரிகள் குழுவின் தலைமை அதிகாரி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறித்து …

Read More »

இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்காததற்கான காரணம் என்ன?

உலகின் மிக சிறப்பு மிக்க விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. ஆனால், இந்த் ஆண்டும் நோபல பரிசு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி இந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணமும் கூறப்பட்டுள்ளது. அதாவது, பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு …

Read More »