நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் மாநாட்டை கோவையில் நடத்துவது குறித்து தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் தெரிவிக்காத ரஜினி, மீண்டும் நேரம் வரும்போது அரசியல் பேசுகிறேன் என்று கூறி தனது உரையை முடித்து கொண்டார். இது அவரது …
Read More »தேர்தலில் தோற்றாலும் மக்கள் பணி தொடரும் – கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அரசியலில் இருந்து விலக மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கினார். அதன் பின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் கூட மாதிரி கிராம சபை கூட்டத்தை நடத்தினார். இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று சென்னை …
Read More »நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் வெற்றி பெற இவரா காரணம்?
அமைச்சர் மங்கள சமரவீரவின் தலையீடு காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருந்த பிரச்சினையான நிலைமையில் அந்த கட்சியை சேர்ந்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்களை இலகுவாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பான நிலைப்பாட்டுக்கு கொண்டு வர முடிந்தது. வெற்றி நெருங்கி வரும் வேளையில், அமைச்சர் …
Read More »குற்றவாளிகள் தப்புகின்றனர்: நாடாளுமன்றில் சுமந்திரன் சுட்டிக்காட்டு
குற்றவியல் வழக்குகளில் தாமதம் என்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. சட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரத்தில் …
Read More »ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது கொள்கை விளக்க அறிக்கையை இரண்டாவது தடவையாக நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். நடைபெற்று வரும் ஆட்சியின் 8வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அவர் முன்வைத்த கொள்கை விளக்க அறிக்கைக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக இந்த ஆட்சியின் எஞ்சிய இரண்டு வருட காலத்துக்கான கொள்கை விளக்க அறிக்கையை அவர் முன்வைத்தார். ஆட்சிக்கு வரும் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் எதனையும் உருப்படியாக நிறைவேற்றியிருக்காத நிலையில் அவரது இந்தக் …
Read More »கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனர்த்தம்! ஒரு கோடி ரூபாவுக்கு மேல் நட்டம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் எரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையத்தின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உபகரணங்கள் தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. விமான …
Read More »ஜெயலலிதா மரண விசாரணையில் திடீர் திருப்பம்!
ஜெயலலிதாவின் உடல்நிலை, 2016 மே மாதத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது’ என, விசாரணை கமிஷனில், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் கூறியது, விசாரணையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, 40க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று, சென்னை, அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர், விசாரணைக்கு …
Read More »மீண்டும் சிதறும் முள்ளிவாய்க்கால்! தவிர்ப்பார்களா ஈழத்தமிழர்கள்?
உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 18, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. தமிழர்கள் விடுதலை பெறவும், உரிமைகளை அடையவும், தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் யுத்தத்தில் செலவிட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் …
Read More »ரணில் என நினைத்து மஹிந்தவை தாக்க முற்பட்ட மக்கள்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நினைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாகனம் சுற்றி வளைக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரணில் என நினைத்து தனது வாகனத்தை பொது மக்கள் தாக்க முயற்சித்தாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார். காலி சமனல மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்த இந்த தகவலை வெளியிட்டார். இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட …
Read More »நாடாளுமன்றில் வைத்து ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு
நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் எட்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்துகையில் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் …
Read More »