Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 190)

செய்திகள்

News

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – விபத்தில் 7 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சோலான் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளோடு சோலான்-ராஜ்கார் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர். நயி-நேட்டி என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த 7 பேர் …

Read More »

அன்னையர் தினத்தன்று தாயுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அன்னையர் தினமான இன்று தனது அன்னையை நேரில் சந்தித்து இன்று ஆசி பெற்றார். உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலப்புரத்தில் உள்ள தனது தாயை நேரில் சந்தித்து அவருக்கு புது புடவையைப் பரிசாக வழங்கி, இனிப்பு ஊட்டி, …

Read More »

எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை

எஸ்.வி சேகர் மீது ஒடுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவானார். மேலும், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை …

Read More »

உயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்

பாகிஸ்தானில் பாலம் மீது செல்பி எடுத்த போது, பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் …

Read More »

குழந்தை கடத்தல் கொலைக்கு போலீஸ் தான் காரணம் – தமிழிசை

வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் திருவள்ளூரில் குழந்தை கடத்த வந்தவர் என கருதி மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. …

Read More »

நினைவேந்தலின் போது முதன்மைச் சுடரை நான் ஏற்றவேமாட்டேன்!

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகைச் சுடரை பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து யாராவது ஒருவர் ஏற்றட்டும். நான் ஏற்றவே மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கு மாகாண சபை ஒருங்கிணைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகைச் சுடரை போரால் பாதிக்கப்பட்ட அல்லது உறவுகளைப் பறிகொடுத்த தரப்புக்களில் …

Read More »

இன்டர்போல் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் பெயர்கள் நீக்கம்

யாருடைய தேவைக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என சிங்களப் பத்திரிகையொன்று கேள்வி எழுப்பியுள்ளது. கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் 154 பேரின் பெயர்கள் இவ்வாறு இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்தப் பெயர்கள் பின்னர் நீக்கப்பட்டுள்ளதாகவும் யாருடைய தேவைக்காக இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டது என குறித்த கேள்வி எழுப்பியுள்ளது. எமில்காந்தன் மற்றும் இன்னுமொரு புலி உறுப்பினரின் பெயர் மட்டுமே …

Read More »

வடக்கு மாணவர்களுக்கு யாழ் இராணுவ அதிகாரி விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று …

Read More »

யாழில் இருந்து விடை பெறும் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனிற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து, மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கமர் ஆகியோருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், …

Read More »

வடக்கு முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்தும் யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் அதிரடி முடிவு

வடக்கு முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தனித்து அனுஸ்டிக்க முடிவு செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழ மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவது என்று நாம் திட்டமிட்டதன் பிரகாரம் மக்கள் கனவை நிறைவேற்றியே தீருவோம். இதற்கான கலந்துரையாடல் நாளை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும். இதில் யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் மாணவர் பிரதிநிதிகள், சிவில் சமூக …

Read More »