நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். வரகாபொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்ன் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பை மாற்றியும், தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தவே முயற்சிக்கின்றது. எனினும், நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் …
Read More »அத்துமீறும் போலீஸார்: பயத்தில் கோவிலில் தங்கும் தூத்துக்குடி பெண்கள்!
இந்த பரபரப்பு தணிவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் ஒருசில நாட்களில் இயல்புநிலை திரும்பிய பின்னர், பாதுகாப்பிற்காக குவிக்கப்பபட்டிருந்த காவல்துறையினர் அங்கிருந்த வெளியேறினர். ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் உள்ள கிராமப் பகுதிகளில், நள்ளிரவு நேரங்களில் காவல்துறையினர் வீடுவீடாக சென்று ஆண்களை மிரட்டியும் கைது செய்தும் வருகிறார்களாம். காவல்துறையினரின் இந்த அத்துமீறலால் மடத்தூர் கிராம பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ஊர்க்கோயிலில் தங்கி …
Read More »தமிழக அரசுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எச்சரிக்கை!
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதிகளில் கட்சி கொடியினை ஏற்றி வைக்கவும், கட்சி தொண்டர்களின் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்றுள்ளது ஆக்கப்பூர்வமான சந்திப்பதாக இருக்க வேண்டும் என்றும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வந்துள்ள தீர்ப்பு முடிவில்லாததாக இருப்பதாகவும், இதுபோன்ற வழக்குகளில் காலகெடுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், 3-வது நீதிபதி …
Read More »க.பொ.த சாதாரணதரத்திற்கான பாடங்களை 6ஆக குறைக்கத் திட்டம்
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரத்திற்கான பாடங்களை 6 ஆக குறைப்பதற்கு தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தினூடாக இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்கு 26 பாடங்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »24 வயது இளைஞன் சடலமாக மீட்பு
இன்று காலை புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் துவான் தில்கான் (வயது 24) என்ற இளைஞர் ஆற்றுக்கு குளிக்க சென்ற பின்னர் சடலமாக மீட்கபட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. குறித்த இளைஞன் இன்று காலையில் தனது சகோதரர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். சகோதரர்கள் இருவரும் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால். உடனடியாக குளித்து விட்டு சென்றுள்ளனர். பின் இவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய …
Read More »கிளிநொச்சியில் தமிழ் மொழி புறகணிப்பு! மனோகணேசன் கொந்தளிப்பு
கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் வீதியில் புதிதாக அமைக்கபட்ட பதாகையில் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.ஆனால் தமிழ் மொழியை புறகணித்து விட்டனர். இதை பார்த்த தமிழ் மக்கள் பதாகையில் தங்கள் மொழியின் ஏன் எழுதபடவில்லை என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அமைச்சர் மனோகணசனும் இது என்ன அநியாயம் என இச்சம்பவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
Read More »கிழக்கு பல்கலைக்கழக மாணவி சடலமாக கண்டெடுப்பு!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். நாவற்குடா கிழக்கு, 4 குறுக்கு வீதி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் . …
Read More »யாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது!
யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவோடு இரவாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது …
Read More »தன்னை கேலி செய்தவர்களிடம் மஹிந்த் விடுத்துள்ள சவால்
வரி அறவீடுகளை 20 வீதமாக குறைத்து காண்பிக்குமாறு தற்போது சவால் விடும் நபர்கள் அன்று போரை முடிவுக்கு கொண்டு வந்து காட்டுமாறு தனக்கு சவால் விடுத்தார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது எனக்கு சவால் விடுவோர் நான் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நினைக்கவில்லை. நான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே அவர்கள் எந்த அச்சமும் சந்தேகமும் இன்றி வடக்கு, கிழக்கிற்கு செல்கின்றனர். …
Read More »சிங்கப்பூரை இரவில் சுற்றிவந்தார் வடகொரிய ஜனாதிபதி
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் இன்றிரவு சிங்கப்பூரை சுற்றி பார்த்து பலரிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நாளை காலை அமெரிக்க ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு முன்னதாக இரவில் கிம் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துள்ளார். இன்று மாலை ஆறு மணியளவில் கிம் தங்கியுள்ள சென் ரெஜிஸ் ஹோட்டலிற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைவதை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர். அதற்கு சில மணிநேரத்தின் பின்னர் கிம் மரினா பே சான்ட்ஸ் என்ற ஆடம்பரஹோட்டலிற்குள் …
Read More »