சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க டிடிவி தினகரன் சதி செய்து வருகிறார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் …
Read More »நிர்மலா தேவி விவகாரம் – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிசிஐடி: சிக்கிய இரண்டு பேராசிரியர்கள்
பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸார் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் ஆளுனர் …
Read More »அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிரசவித்தவர்களின்- விவரம் திரட்டுகின்றது ரிஐடி!!!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் குழந்தை பிரசவித் தவர்களின் விவரத்தை பங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கோரியுள்ளனர். மருத்துவமனையிலும், வீடுகளிலும் குழந்தை பிரசவித்தவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன என்று அறிய முடிகின்றது. அதற்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரனைத் தொடர்புகொண்டு கேட்டோம். ‘குழந்த பிரசவித்தவர்களின் விவரங்களைப் பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் …
Read More »புதிய அரசமைப்பு விடயத்தில்- தலைவர்களுக்கு ஆர்வமில்லை- அமைச்சர் மனோ!!
புதிய அரசமைப்பு கொண்டுவரப்படாது என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்தார். ஐ. டப்ளியூ.பி.ஆர். எனப்படும் போர் மற்றும் சமாதானம் தொடர்பிலான அறிக்கையிடல் கற்கை நிலையம் சார்பாக, அமைச்சர் மனோ கணேசனை அமைச்சில் நேற்றுச் சந்தித்த புலனாய்வு ஊடகவியலாளர்களிடமே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதில் தலைமை அமைச்சருக்கும், அரச தலைவருக்கும் எந்த ஆர்வமும் …
Read More »மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!
வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் …
Read More »மழை வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்; 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம்
ஜப்பானில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஜப்பான் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு பிறகு செய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் …
Read More »வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும்- நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு!!
நல்லூர்ப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் சபையின் வாசகம் அடங்கிய வரவேற்பு வளைவு அமைப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நல்லூர்ப் பிரதேச சபையின் அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் குறித்த பிரேரணையை தவிசாளர் முன்மொழிந்தார். பிரேரணையில் தெரிவித்தாவது: சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வரவேற்பு வளைவுகளை நிறுவத் தீர்மானித்துள்ளோம். அதைப் பிரேரணையாக இந்தச் சபையில் முன்மொழிகின்றேன். இதை …
Read More »கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு
இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்திகள் ,டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட பல அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
Read More »சித்திரவதைகள் -தொடரும் நாடுகள் பட்டியலில் -இலங்கைக்கு மீண்டும் முதலிடம்
உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று , சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய இலங்கை ஏழாவது ஆண்டாகவும் (2017ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள்) இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது. தேசிய அரசு ஆட்சி பீடம் ஏறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் இலங்கையில் மிகவும் கொடூரமான …
Read More »இலங்கையை விட்டு வெளியேறும் விஜயகலா?
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பரப்புரைச் செயலாளர் துசார திசநாயக்க இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் …
Read More »