கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறுவர் உட்பட பத்துக்கும் மேற்பட்டடோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். Danforth Avenueவுக்கு அருகில் Logan Avenue பகுதிக்கு அருகில், கனேடிய நேரப்படி இன்றிரவு 10 மணியளவில் இந்த …
Read More »பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற மகன் திடீரென மரணம் – அதிர்ச்சியில் தாய்
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதுமலை தெற்கு மானிப்பாய் சேர்ந்த 38 வயதான ஜோசெப் அருள்தாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று தேனீர் குடித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன், திடீரென மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள …
Read More »சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் – நவாஸ் ஷெரீப் மகள் மரியம்
ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் அடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப்பை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீக்கியது. அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் …
Read More »சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி – தந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி!
தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் இன்று கலந்துகொண்டார். கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற சடங்கில் கலந்து கொள்வதற்காக, அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து …
Read More »27 ஆம் திகதி முதல் 6 மணி நேர மின்சாரத் தடை
மின்சாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் …
Read More »புதிய கட்சிக்கு தலைவராகும் மஹிந்த ராஜபக்ஷே? ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலை என்ன?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசியல் கட்சிகள் பலவற்றை இணைத்து ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன கட்சியொன்றினை உருவாக்கவுள்ளதாக, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கருத்து தெரிவிக்காமல் இருக்க பொதுவான தீர்மானத்திற்கு வந்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவே இறுதி …
Read More »A/L பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்கள் தரவிறக்கம் செய்யலாம்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்ய முடியும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமாக அனுபப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இம்முறை க.பொ.த உயர்தர …
Read More »பறந்துகொண்டிருக்கையில் நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 2 பேர் பலி
தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த இரண்டு பயணிகள் இறந்துவிட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானம் பறந்துகொண்டிருக்கையில் , விமானத்தின் உட்பக்க பாகங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திடீர் என்று எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே விமானத்தின் இறக்கை தீ பிடித்துள்ளது. …
Read More »யாழ்பாணம் திட்டமிட்டு சிதைக்கபடுகிறதா? தொடரும் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்
வாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் சென்ற வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட்டின் கதவு, ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கி பெற்றோல்க் குண்டை வீசி வீட்டைக் கொழுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தாமரை வீதி, வண்ணார் பண்ணையில் உள்ள வீடு ஒன்றிற்கு நேற்று இரவு 8.30 மணி அளவில், மூன்று மோட்டார் சைக்கிளில் சுமார் 6 முதல் எட்டு பேர் வரையான …
Read More »வவுனியாவில் கடையை உடைத்து பணம் திருட்டு
வவுனியா வைரவபுளியங்குளம் தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள சில்லறை கடையை இரவு இனம்தெரியாத நபர்களால் உடைத்து, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர். குறித்த கடையின் உரிமையாளர் நேற்று இரவு வர்த்தன நிலையத்தை மூடிவிட்டு இன்று காலை மீண்டும் திறப்பதற்காக வருகை தந்த போதே, கடையின் பூட்டு உடைக்கபட்டு பணம் களவாடப்பட்டதை அறிந்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »